
பொடிக்குத் தேவையானவை.
200 -கிராம் முழு மல்லி
100 கிராம். கறுப்பு மிளகு.
50 கிராம் சிறு சீரகம்.
100 கிராம் கறுப்பு எள்ளு
200 கிராம் முழு உளுந்து
200 கிராம் கடலைப் பருப்பு
100 கிராம் பாசிப் பயறு.
100 கிராம் வெந்தயம்
100 கிராம் பெருங்காயம்.(+)
இத்தனையும் தனித் தனியாக பொன் நிறத்தில் வறுத்து எடுத்து பெருங்காயத் தூளையும் சேர்த்து ஒன்றாக கொஞ்சம் கொரகொரப்பாகப் பவுடர் பண்ணி எடுக்கவும்.
அடுத்து தாளிக்கத் தேவையானவை.
200 கிராம் கோது நீக்கிய நிலக்கடலை.
உழுந்து. கடலைப் பருப்பு
வெள்ளை எள்ளு. கடுகு.
அனைத்தும் 100 கிராம் அளவு .
200 இஞ்சி 200 பூண்டு சிறியதாக நறுக்கியவை இரண்டு கொத்து புதிய கறிவேப்பிலை. 250 கிராம் காரமான பட்டமிளகாய்.
25 கிராம் தனி மிளகாய்ப் பவுடர்
50 கிராம் மஞ்சள் தூள். ஒரு லீட்டர் சுத்தமான நல்லெண்ணெய்.
250 கிராம் பழப்புளி.
செய் முறை
பெரிய பாத்திரமாக எடுக்கவும் அடுப்பை ஒரு சம நிலைக்கு எரிய விடவும் எண்ணெய் சூடானதும்.
முன்பாகா நிலக்கடலை போடவும் 15 நிமிடம் கழிச்சு கடலைப் பருப்பு உழுந்தம் பருப்பு போட்டுக் கிளறவும் 10 நிமிடம் கழிச்சு எள்ளு கிள்ளி வைத்துள்ள பட்டமிளகாய் இவைகளைப் போடவும் 5 நிமிடத்தில் கடுகு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு போட்டுக் கிளறவும்.10 நிமிடம் ஆனதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் அஜனா உப்பு(பவுடர்) போட்டுக் கிளறவும். 15 நிமிடம் ஆனதும் பொடி செய்த பொருட்களைப் போட்டு அடுப்பை மெதுவாக வைத்துக் கிளறவும். 7 நிமிடத்துக்குப் பின் அரை லீட்டர் நீரில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி நன்றாக நீர் வற்றும் வரைக் கிண்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைத்திடவும் ஆறிய பின் எண்ணெயோடு சேர்த்தே ரப்பர் அல்லது கிளாஸ் போத்தலில் போட்டு அடைத்து கிளாஸ் போத்தலானால் பிரிஷ்சில் வைத்திடவும் ரப்பரானால் பிரஷரில் வைத்திடவும் ஓர் ஆண்டு வரை பாவிக்கலாம் (கொஞ்சமாக செய்திட நினைப்போர் கொடுத்த பொருளின் அளவை பிரித்து அளவைக் கணக்கிட்டு எடுக்கவும்.

இப்போ சாதத்துக்கான அளவு
1 அரிசிக் கப் அளவு சோறுக்கு
2- மேசைக்கரண்டி தான் அளவு
பொடி செய்வதுதான் கஸ்ரம் அதை செய்து வைத்தால் சோறோடு சேர்ப்பது சிரமம் இல்லை அவசரத்துக்கு விரைவாக செய்து சாப்பிடலாம் வாசமும் தூக்கல் சுவையும் தூக்கல்
சோறு நீர் வற்றியதும் அல்லது நீர் வடி கட்டியதும் பொடியைப் போட்டு (தேவைப் பட்டால்.) கொஞ்சம் நல்லெண்ணெய்யும் ஊற்றி கிளறி விட்டு 10 நிமிடத்தில் சாப்பிடலாம் கூடவே எதனையும் சேர்க்க வேண்டாம் தனியாகவே சாப்பிடுக.
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments