Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-11


புறங்கூறாமை

குறள் மொழி:38

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.

குறள் எண்:189

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப் பற்றி, பழித்துப் புறங் கூறுபவரின் உடலை இவ்வுலகம் அறத்தை எண்ணித்தான் சுமக்கிறது போலும்.

நபிமொழி:

புறம் பேசாதீர்கள்: நம்பிக்கை கொண்டோரே ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். உங்களுக்குத் தெரியாததை ஊகித்துப் பேசாதீர்கள். அதைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்!

உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?
இறைவசனம் - திருக்குர் ஆன்: 49:12

அறன் வலியுறுத்தல்

குறள் மொழி 39

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல்.

குறள் எண் 33

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் தன்னால் இயன்றவழிகளில் எல்லாம். இயன்றவரை அறச்செயல்களைத் தக்க இடங்களில் இடைவிடாது செய்ய வேண்டும். அதுவே தர்மமாகும்.

நபிமொழி :

தானம், தர்மம் செய்வது என்பதெல்லாம் பணத்தால் மட்டுமல்ல!... "ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர்வதற்கு உதவுவதும்: அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் கூட தர்மமாகும்...
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)
நூல் : புகாரி. முஸ்லிம். (தமிழ் 1782)

(தொடரும்)

 


Post a Comment

0 Comments