
உற்று நோக்காதடி மயிலே
என் உள்ளம் காணாப் பாடல்
பாடுதடி தனியே தன்னந் தனியே .
திறக்காதடி உன் விழியை மயிலே
எனது மொழி பறந்து
போகுதடி வெளியே வெட்ட வெளியே.
இதழ் விரிக்காதடி மயிலே
இதயம் ஓசை எழுப்புதடி
உன் சங்குப் பல்லின்
ஒளியினிலே வட்டமிடுகிறதே
பட்டுப்பூச்சியுமடி மயிலே.
மூச்சுக் காற்றும்
சூடாகிறதடி மயிலே.
பனியாக நானும் உருகியே
போகின்றேனடி மயிலே.
உன் இடுக்கன் கால்களிரண்டும்
நடக்கையிலே மயிலே.
எட்டி எட்டிப்பிடிக்க
என் கரம் துடிக்குதடி மயிலே.
கட்டுடம்புக்காரியே
கம்பங்கூழுக்குச் சொந்தக்காரியே
காட்டுப்பாதை வழியே
நீ போகையிலே மயிலே என் மயிலே.
விடளைப் பையன் வெட்டு
மரத்துக்குச் சொந்தக்காரன்.
வேட்டைய புரத்து ராஜா
போல வாட்ட சாட்டக்காரன்.
வழித்துணையாக வருவேனடி
மயிலே என்னுயிர் மயிலே.
பட்டு விரல் கொண்டு
முரட்டுக் கன்னம் மேலே
அசட்டுச் சிரிப்போடு
பட்டாம் பூச்சி போலே
தட்டுவாயோடி மயிலே.
புளியந் தோப்புக்குள்ளே
புளியம் மரத்தின் மேலே
தலை கீழாகவே தொங்கும்
தூக்கணாங் கூடு போலே.
உன் பின்னாலும் முன்னாலும்
தன்னாலே தொங்குதடி
எண்ணமெல்லாம் மயிலே
உன்னாலே உன்னாலே எல்லாம்
உன்னாலே தானடி என் மயிலே.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments