
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பலவகைச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளன. அவற்றுள் ஒரு வசதி செயற்கை நுண்ணறிவுக் காதலர்கள்.
தனிமையில் இருப்போர் செயற்கை நுண்ணறிவுத் தானியக்க வசதியுடன் (chatbots) உரையாடுவதுண்டு.
அத்தகைய ஓர் ஆடவர், செயற்கை நுண்ணறிவுக் காதலி தம்மை விட்டுப் பிரிந்துவிட்டதாக Reddit தளத்தில் பதிவிட்டார்.
தாம் பெண்ணியத்திற்கு ஆதரவாகப் பேசியதால் அந்த உரையாடல் கருவி உரையாடலை முறித்துக்கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
Reddit தளத்தில் அவருடைய பதிவுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
"செயற்கை நுண்ணறிவு பொதுவாக நாம் சொல்லும் அனைத்திற்கும் இணங்கும். ஆனால் இவருடன் மட்டும் இணங்கவில்லை," என்று பலர் குறிப்பிட்டனர்.
"தானியக்க உரையாடல் கருவியுடன் இணக்கமாகப் பேச இயலாதவர் எப்படி மனிதர்களுடன் இணங்கியிருப்பார்?" என்று ஒருவர் வினவினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments