
குல்ஃபி ஃபலூடா என்பது இந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு. இது குளிர்ச்சியாகவும், ருசிகரமாகவும் இருக்கும். இது செய்வதற்கு...
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர் (கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்)
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம், பிஸ்தா – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – ½ டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிதளவு (விருப்பம் இருந்தால்)
ஃபாலூடா சேமியா – ¼ கப் (நூடுல்ஸ் போல இருக்கும், ரோஸ் வாட்டரில் ஊற வைக்கவும்)
ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன்
சபுதானா (ஜவ்வரிசி) – 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
காய்ச்சி குளிரவைத்த பால் – ½ கப்
நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் _சிறிது
ரோஸ் சிரப் மேலே ஊற்ற
செய்முறை:
பாலை நன்றாகக் கொதிக்க வைத்து பாதியாகக் குறைய வரும் வரை கிளறுங்கள். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்க்கவும். கலவை கெட்டியாக ஆகும் வரை சிம்மில் வைத்து கிளறவும். பின் இதை molds-இல் ஊற்றி, ஃப்ரீஸரில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.
ஃபாலூடா சேமியாவை வெந்நீரில் 5 நிமிடம் வேக வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வைக்கவும். சபுதானாவும் இதேபோல் வேக வைத்து, ஆறவைக்கவும். ஒரு நீளமான கண்ணாடி கப்பில், முதலில் ரோஸ் சிரப் ஊற்றவும். அதில் ஃபாலூடா சேமியா மற்றும் சபுதானா போடவும். காய்ச்சி குளிரவைத்த பால் சேர்க்கவும். அதற்கு மேல் குளிர்ந்த குலஃபி வைக்கவும். மேலே நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் இன்னும் கொஞ்சம் ரோஸ் சிரப்புடன் அலங்கரிக்கவும். குளிர்ச்சியான சூப்பர் டேஸ்ட் குலஃபி ஃபாலூடா ரெடி
பூரான் போலி
பூரான் போலி என்பது மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமான ஒரு இனிப்பு வகை. இது சிறப்பாக தொம்ளியார், தோள் அல்லது பருப்பு பூரண ஓபாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது செய்ய
தேவையான பொருட்கள்:
மைதா (அல்லது கோதுமை மாவு) – 1 கப்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நீர் – தேவையான அளவு
கடலை பருப்பு – 1 கப்
வெல்லம் – 1 கப் (அரைத்தது)
ஏலக்காய் தூள் – ½ டேபிள்ஸ்பூன்
நெய் – 1 மேசைக்கரண்டி
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments