
நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நாளை இந்த இரு சூடான பானங்களுடனே துவக்க விரும்புகிறர்கள். ஒருசிலர் டீ-யை விட காஃபி ஆரோக்கியமானது என்று கூறுகின்றனர், அது நேரம் சிலர் தேநீர், அதிலும் குறிப்பாக மூலிகை தேநீர் வகைகள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்று வாதிடுகின்றனர்.
பலர் காலை எழுந்தவுடன் தங்கள் நாளை ஒரு கப் சூடான பால் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ அல்லது பிளாக் டீ-யுடன் தொடங்க விரும்புகிறார்கள், ஆனால் ஒருசிலர் பிளாக் காஃபியை முதலில் பருக விரும்புகிறார்கள். எனவே இரண்டு பானங்களும் மிகவும் பிரபலமானவையாக உள்ளன.
நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நாளை இந்த இரு சூடான பானங்களுடனே துவக்க விரும்புகிறர்கள். ஒருசிலர் டீ-யை விட காஃபி ஆரோக்கியமானது என்று கூறுகின்றனர், அது நேரம் சிலர் தேநீர், அதிலும் குறிப்பாக மூலிகை தேநீர் வகைகள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்று வாதிடுகின்றனர்.
இந்த சூழலில் சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே பிளாக் காஃபி பிரபலமடைந்துள்ளது. வழக்கமாக பருகும் மில்க் டீ அல்லது பிளாக் டீ-யை விட பிளாக் காஃபி ஏன் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் அது வழங்க கூடிய சில நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
நீங்கள் காலை எழுந்ததும் முதல் பானமாக டீ அருந்தினாலும் சரி அல்லது பிளாக் காஃபி அருந்தினாலும் சரி, இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை புரிந்துகொள்வது முக்கியம். இந்த வேறுபாடுகளை அறிந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது என்பதை தேர்வு செய்ய உதவும். இரண்டிற்குமானமுக்கிய வேறுபாடுகளில் ஒன்று காஃபின் உள்ளடக்கம். ஆம், ஒரு கப் பிளாக் காஃபியில் தோராயமாக 90 -100 மில்லிகிராம் காஃபின் உள்ளது என்றால் இதே அளவு பிளாக் டீ-யில் 25 முதல் 50 மில்லிகிராம் மட்டுமே காஃபின் உள்ளது. அதிக காஃபின் இருப்பதால் பிளாக் காஃபி பலரை மிகவும் உற்சாகப்படுத்தும் விருப்பமாக இருக்கிறது.
காலை நேரத்தில் பிளாக் காஃபி குடிப்பது மூளை செயல்பாட்டைத் தூண்டும். இதிலிருக்கும் காஃபின் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது, ஆற்றலை வழங்குகிறது, கவனத்தை அதிகரிக்கிறது மற்றும் மேம்படுத்துகிறது. நீங்கள் சுறுசுறுப்பாக அலுவலகத்திற்கு செயல் வேண்டும் என்றாலோ அல்லது காலையில் எழுந்தவுடன் படித்தாலோ டீ-யை விட, பிளாக் காஃபி பருகுவது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விழிப்புடன் இருக்க உதவும்.
தவிர பிளாக் காஃபி எடையை கட்டுப்படுத்த உதவும். குறைந்த கலோரியுடன் குறிப்பாக சர்க்கரை அல்லது பால் இல்லாமல் பிளாக் காஃபி பருகும் போது, அது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது. மறுபுறம் டீ-யில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுவதால், கலோரி நுகர்வு அதிகரிக்கிறது. கூடுதலாக பிளாக் காஃபியில் பாலிபினால்ஸ் மற்றும் குளோரோஜெனிக் ஆசிட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை இன்ஃளமேஷனை குறைக்கின்றன மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நிலைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். பிளாக் காஃபியானது நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
தொடர்ந்து பிளாக் காஃபி குடிப்பது நினைவாற்றலை மேம்படுத்தும் என்றும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்புச் சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்கின்றன ஆய்வுகள். டீ-யும் கூட அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றாலும் இதில் அதிக நன்மைகளை தர கூடியதாக பிளாக் காஃபி தான் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பிளாக் காஃபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை குடிப்பது அட்ரினலின் அளவை அதிகரிக்கிறது. இதனால் வலிமை, ஸ்டாமினா மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிக்கிறது, நீண்ட மற்றும் மிகவும் பயனுள்ள ஒர்க்கவுட் செக்ஷன்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. சிறந்த பிளாக் காஃபியை அனுபவிப்பதற்கான ஆரோக்கியமான வழி, பிரஞ்சு பிரஸ், ட்ரிப் அல்லது pour-over முறைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உண்மையான காஃபி கொட்டைகளைப் பயன்படுத்துவதாகும். சர்க்கரை, க்ரீமர்கள் அல்லது செயற்கை சுவையூட்டிகளைத் தவிர்க்கவும். எனினும் சுவைக்காக ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.
மொத்தத்தில் மிதமான அளவில் எடுத்து கொள்ளும் போது, டீ-யை விட அதிக நன்மைகளை வழங்கும் ஒரு சூப்பர் பானமாக பிளாக் காஃபி இருக்கலாம். அதற்காக பால் கொண்டு தயாரிக்கப்டும் தேநீர் அல்லது பிளாக் டீ ஆரோக்கியமற்றது என்று அர்த்தமல்ல, நீங்கள் இவற்றை ஒரு நாளைக்கு இரண்டு கப் வரை பருகலாம்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments