
வெஃகாமை
குறள் மொழி 94
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
- குறள் எண் : 174
குறள் மொழியின் பொருள் :
ஐம்புலன்களையும் வென்ற அறிவுடைய நல்லோர் தம்
வறுமையைத் தீர்க்க, பேராசை கொண்டு பிறர்பொருளைக் கவர, அபகரிக்க விரும்பமாட்டார்.
நபிமொழி
பேராசை கொண்டு தவறிழைக்காதீர்கள்; நீங்கள்
செய்வது அநியாயம் என்பதை அறிந்து கொண்டே
உங்களிடம் ஒப்படைக்கபட்ட பிறர் பொருளுக்கு
(அமானிதங்களுக்கு) மோசம் செய்யாதீர்கள்.
இறைவசனம்
ஆதாரம் : திருக் குர்ஆன் - 8 : 27
தீவினையச்சம்
குறள் மொழி 95
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.- குறள் எண் : 210
குறள் மொழியின் பொருள் :
ஒருவன் தீயவழிகளில் சென்று தீய செயல்களைச்
செய்யாது இருத்தலே ஓர் அறமாகும். அத்தகையோனுக்கு ஒருபோதும் கேடு வராது.
நபிமொழி
"மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில்,
அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம் தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 136)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments