
கணவருக்குத் தெரியாமல் பாத்திரம் கழுவும் கருவியை வாங்கினார் மனைவி.
அதனால் கோபங்கொண்ட கணவர் வீட்டுப் பொருள்களை அடித்து நொறுக்கினார்.
சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் சம்பவம் நடந்தது.
வீட்டில் தட்டுகளைக் கழுவ கணவர் உதவுவதில்லை. குளிர்காலத்தில் தண்ணீர் மிகவும் குளிர்ந்திருக்கும்; தட்டுகளைக் கையால் கழுவுவது சிரமம் என்று மனைவி நினைத்தார்.
வீட்டுக்குக் கருவி அனுப்பி வைக்கப்பட்ட பிறகே மனைவி அதை வாங்கியிருப்பதைக் கணவர் அறிந்தார்.
கருவியைப் பயன்படுத்தினால் அதற்காகக் கூடுதல் மின்சாரக் கட்டணம் செலுத்துவது சிரமம். அதனால் கருவியைத் திருப்பி அனுப்பிவிடச் சொன்னார்; மனைவி மறுத்தார்.
கணவரின் ஆவேசத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த மனைவி அதைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
காணொளியைக் கண்ட இணையவாசிகளிடையே பெரும் விவாதம் எழுந்தது.
குடும்பச் சூழலைக் கருத்தில்கொள்ளாமல் மனைவி கருவியை வாங்கியது தவறு என்று சிலர் கூறினர்.
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத கணவரை மனைவி உடனே விவாகரத்து செய்வதே நல்லது என்று வேறு சிலர் கூறினர்.
இறுதியில் தம் தவற்றை உணர்ந்த மனைவி மறுநாளே கருவியைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட கணவர், மலிவான விலையில் வேறொரு கருவியை வாங்கிக் கொடுக்கச் சம்மதித்தார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments