Ticker

6/recent/ticker-posts

கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணாக்கியரின் திருக்குறள் நாட்டியாஞ்சலி உலக சாதனை நிகழ்ச்சி!


13-01-2026 ஆம் நாள் காலை 9-30 மணிக்கு கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரியில்  உலக சாதனை நிகழ்ச்சியாக 1330 திருக்குறளுக்கும் 133  கல்லூரி மாணாக்கியர்கள் பங்கேற்ற திருக்குறள் நாட்டியாஞ்சலி மூலம் சாதனை படைத்தார்கள்.

குத்துவிளக்கு ஏற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் உடன் திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சி சரியாக காலை 10-00 மணிக்கு இனிதே தொடங்கியது.

கல்லூரி முதல்வர் மேரி பஃபியோலா சிஸ்டர் தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளர் முன்னிலை வகித்து,சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்பு செய்தார்.

செ.வெ.ரெக்கார்டு ஹோல்டர் ஃபோரம் (புதுச்சேரி இந்தியா) அமைப்பின் தலைவர் உலக சாதனையாளர் திரு.செ.வெங்கடே சன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதனைப் பெண் சி.கலைவாணி,திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் தலைவர்,தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்,தமிழ்ச் செம்மல்,குறள் யோகி, முனைவர் மு.க.அன்வர் பாட்சா,செந்தமிழ் இலக்கியக் கழக தலைவர்,திருக்குறள் ஆய்வுக் கழகம் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி கீதா தயாளன், பேராசிரியர் முனைவர் பொன் கவுசல்யா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
திருமதி சூரியா (VOA), திருமதி விஜயலட்சுமி, திருமதி சௌமியா ஆறுமுகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இரண்டாயிரம் கல்லூரி மாணவர்கள் பார்வையாளர்களாக நிகழ்ச்சியைக் கண்டு  இரசித்தனர்.

சரியாக காலை பத்து மணிக்கு சாதனை பரதாஞ்சலி நிகழ்வு தொடங்கியது... தொடர்ந்து ஒவ்வொரு அதிகாரத்தின் பத்து பாடல்களுக்கு ஒரு மாணாக்கி வீதம் 133 அதிகாரங்களுக்கும் 133 மாணாக்கியர் இடைவெளி இன்றி பரத நாட்டியம் ஆடி 4 மணி 50 நிமிடங்களில் 1330 பாடல்களுக்கும் சாதனையை நிறைவு செய்து அசத்தினார்கள்.

மாணவர்களின் சாதனையைப் பாராட்டி குறளாசான் முனைவர் மு.க.அன்வர் பாட்சா, உலக சாதனையாளர் திரு.செ.வெங்கடே சன், சாதனைப் பெண் சி.கலைவாணி, கவிஞர் கீதா தயாளன், திருமதி சூரியா, திருமதி சௌமியா ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் அமைப்பின் சார்பில் கல்லூரிக்குச் சாதனை விருது கல்லூரியின் செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர், பேராசிரியர் முனைவர் திருமதி மல்லிகா மற்றும் முனைவர் பொன் கவுசல்யா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
நிறைவாக நாட்டுப் பண்ணுடன், சமத்துவப் பொங்கல் மற்றும் மதிய உணவு விருந்தோம்பல் உடன் சாதனை நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


 


Post a Comment

3 Comments

  1. மிகச் சிறப்பு. தமிழ்ப் பண்பாடுகளை உலகமெங்கும் கொண்டு செல்லும் புரட்சி வேட்டை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகச் சிறப்பு. தமிழ்ப் பண்பாடுகளை உலகமெங்கும் கொண்டு செல்லும் புரட்சி வேட்டை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிகச் சிறப்பு... நிகழ்ச்சியை ஏற்படு செய்தவர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்... அன்புடன், நட்புடன் திருக்குறள் ச. சக்திவேல், பேராசிரியர், கோவை

    ReplyDelete