Ticker

6/recent/ticker-posts

ஆத்து மேட்டுல போறவளே!


கொய்யாக்காய் 
கொண்டக் காரியெடா.
கொய்து  சொசுவம் 
எடுத்துக்கிட்ட சேலக்காரியெடா.
தண்டையும் கெண்டைக் 
காலுல கொஞ்சுதடா.
சந்தை வளையலும் 
கையிலே சிணுங்கிக்குதடா.
ஆமை போல
 ஊந்துக்கிட்டே போறாளடா.
கால் பட்ட புல்லும் மயங்கி 
படுத்துக்கிட்டே  பார்க்குதடா.
ஆலம்  விழுது போல
இடையை ஆட்டிக்கிட்டே 
போறாளடா.
ஆம்புள நெஞ்சமெல்லாம் காதல் 
குடைய விரிச்சுக்கிட்டாளடா.
ஆத்து மேட்டு 
மேல போறவளே.
ஊத்தெடுக்குது 
ஆவலும் ஒம்  மேலே.
குளத்து 
நண்டாக  ஓடிக்கிரவளே.
பார்த்துக்கிட்ட 
யென் கண்ணுக்குள்ள
போதைய ஏத்திக்கிராயெடி.
சோத்துக் கத்தாழ 
போல வழுக்கிக்கிராயே.
உலுவமீனு போல நழுவிக்கிராயே.
காத்தைக் கண்ணுக்கிட்ட 
கருமேகமாக மறஞ்சுக்கிராயே.
கொம்புத் தேனு நோக்கி 
ஏங்கிக்கும். முடவனாக 
ஏங்கிக்க வச்சுக்கிராயே.
பெருங்காய வாசமாக 
எங்கிட்ட பாசமுள்ளது புள்ள.
கருவாட்டு வாடையாக 
நெஞ்சுக்குள்ள நேசமுள்ளது புள்ள.
சட்டிக்கு ஏத்துக்கிட்ட மூடி 
போல.
பூட்டுக்கு ஒத்துக்கிட்ட 
சாவிபோல.
உமக்கு நானும் நல்ல
சோடியாவேன் புள்ள.
இத்துணையும் சொல்லிக்கிட்டேன் .
உம்முணு மூச்சிய வச்சுக்கிட்டு .
ஆத்து மேட்டுல போறவளே 
பாருபுள்ள.

ஆர் .எஸ் . கலா
 

 


Post a Comment

0 Comments