Ticker

6/recent/ticker-posts

WHO-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா... உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து?


அமெரிக்கா வெளியேறுவது குறித்தும், அது எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்தும் அடுத்த மாதம் WHO-வில் உள்ள உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார அமைப்பை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது அமெரிக்க அரசு. முன்னதாக, உலக சுகாதார அமைப்பானது (WHO) உலக அளவில் பொது சுகாதாரத்தை நிர்வகிப்பதில் சரியாக செயல்படவில்லை எனவும், குறிப்பாக கொரோனா காலத்தில் WHO சரியாக செயல்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வருட தொடக்கத்தில் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் WHO-விலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக நேற்று (ஜனவரி 22) அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முடிவு, அமெரிக்காவின் சுகாதாரத்தையும் உலகளாவிய சுகாதாரத்தையும் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதிதான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோதே, ‘அமெரிக்கா WHO-விலிருந்து வெளியேறும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப். தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

இதுவரை உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்காவே இருந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2022-23 காலகட்டங்களில் அமெரிக்கா WHO பணிகளுக்காக 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது. இது இனி குறையும் என்பதால், மற்ற நாடுகள் தற்போது தங்கள் பங்களிப்பையும், அறிவியல் கூட்டமைப்பையும் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபக்கம், கடந்த காலங்களில் WHO உதவியோடு அமெரிக்காவும் பல்வேறு நோய்த்தொற்றின் மூலத்தை கண்டறிந்து தடுத்துள்ளது. இனி அந்த விஷயங்களில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும், குறிப்பாக காச நோய் கட்டுப்பாடு, வைரஸ் பாக்டீரியா தொற்றுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிக்கல்களை சந்திக்கும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்த முடிவு, அமெரிக்க சட்டத்தின் கீழ், விதிகளுக்கு மீறிய முடிவாக உள்ளது. ஏனெனில் அமெரிக்க சட்டத்திருத்தங்களின்படி, WHO-விலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் ஓராண்டுக் கால அவகாசம் வழங்கி, நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். ஆனால் அதை அமெரிக்கா செய்யவில்லை என்பதால், ஐ.நா.-விற்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டாலரை தற்போது அமெரிக்கா கொடுக்க வேண்டும்.

அமெரிக்கா வெளியேறுவது குறித்தும், அது எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்தும் அடுத்த மாதம் WHO-வில் உள்ள உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன என்று சொல்லப்படுகிறது.

news18

 


Post a Comment

0 Comments