
உடனே ராஜகுமாரி தன் கரங்களைத் தட்டி வரேவா பிள்ளை என்றால் இப்படி இருக்க வேண்டும் மருத்துவர் அவர்களே தங்களை நான் மனதாரப் பாராட்டி நன்றி கூறுகின்றேன் வாழ்க உன் பணி தொடர்க உமது சேவை.
எங்கள் அரண்மனை வைத்தியராக தாங்கள் இருப்பதை விட தங்கள் ஊருக்கே மருத்துவராக இருப்பதே நன்று தந்தையின் ஆசைப் படியே என என் மனதில் தோன்றுகின்றது மருத்துவரே நான் கூறியதில் ஏதேனும் தவறுகள் உண்டா? அன்னையே எனக் கூறி ராணியைப் பார்த்தார் ராஜகுமாரி .
உடனே மகாராணி கூறினார் தவறு ஒன்றும் இல்லை மகளே ஆனால் நம் மூத்த மருத்துவர் தன்னோட ஆசையை சபையின் முன் குமரன் வைத்தியரைப் பற்றி அறியாமலே வைத்து விட்டாரே அதுதான் சற்று சிந்தனையாக உள்ளது என்ன செய்வது எனக் கேட்டார்.
அப்போது குமரன் எழுந்து நின்று கூறினான் அரசே என் மனதிலும் ராஜகுமாரி கூறியவாறே தான் உள்ளது அதை தங்களிடம் கூறும் வழி தெரியாமலே அமைதியாக அமர்ந்திருந்தேன் . எனக்கான கடமை என் ஊரில் நிறைந்தே கிடக்கின்றது.
மன்னிக்க, மூத்த அரண்மனை மருத்துவர் ஐயா அவர்களே உங்கள் ஆசைகளையோ இல்லை மகாராணி அவர்களின் கட்டளை தனையோ அவமதிக்கும் நோக்கில் நான் தற்போது பேசவில்லை.
உங்களின் ஆசையை என்னால் நிறைவேற்றிட முடியாது அதாவது அரண் மனை வைத்தியர்ப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையிலே நான் உள்ளேன் ஆகையால் மீண்டும் மன்னிக்கவும்.
என் மனதில் ஒரு வழி தோனுது அதை முன் வைத்திடலாமா? அரசே என்று கேட்டான் மகாராணியும் என்ன? அவை சரி கூறுங்கள் பார்ப்போம் என்றார். குமரன் தன் மனதில் உள்ளதை எடுத்துரைத்திடலானான் அமைதியாகக் கேட்டுக் கொண்ட மந்திரியும் அதை வரவேற்றார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments