
இனியவை நாற்பது-5
கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்னினிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொலலாங்(கு) உரையாமை நன்கு.
விளக்கம்:
எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பது இனிது.
நடுவு நிலையோடு இருந்து, தகுதி இல்லாதவர்களைப் பாராட்டாமல் இருப்பது இனிது.
ஆட்சியாளன் நல்லாட்சி தருவது இனிது.
யாரிடமும் பிறரைப் பற்றி குற்றம் கூறாமல் இருப்பது இனிது.
இனியவை நாற்பது -6
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
விளக்கம்:
முடிந்த அளவு மற்றவர்களுக்குத் தர்மம் செய்வது இனிது.
நல்ல நெறி முறையோடு வாழ்பவர்கள் சொல்லும் சிறந்த கருத்து இனிது.
வலிமையுடன் இருப்பவர்கள், அப்படி இல்லாத மக்களுக்குத் துணையாக இருந்து அவர்களைக் காப்பது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments