Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-13


துறவு

குறள் மொழி 42

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

குறள் எண் :346

குறள் மொழியின் பொருள்:

நான் எனது என்னும் ஆணவத்தை, சுயநலத்தை விட்டவர்கள் வானுலக தேவர்களை விடவும் மேலான சிறப்பு அடைவர்.

நபிமொழி :

ஆணவம் அழிவிற்குரியது. அது. நன்மை தராது. "பூமியில் செருக்குடன் நடக்காதீர்கள். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிடவும் முடியாது; மலையளவுக்கு உயர்த்தி விடவும் முடியாது.

ஆதாரம்: இறைவசனம் : திருக் குர்ஆன் 17:37

அவா அறுத்தல்

குறள் மொழி 43

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.

குறள் எண்:370

குறள் மொழியின் பொருள் :

ஒருபோதும் மனநிறைவைத் தராத பேராசையை ஒழித்துவிடல் வேண்டும். அந்நிலையே ஒருவனுக்கு எப்போதும் நிலையான மகிழ்ச்சியை, இன்பத்தைத் தரும்.

நபிமொழி:

ஆதாமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. பேராசைக்கு முடிவில்லை ஆதலின், இது போன்ற பேராசையிலிருந்து திருந்தி பாவமன்னிப்பு கோரி மீள்பவரின் கோரிக்கையை அல்லாஹ்(இறைவன்) ஏற்றுக் கொள்கின்றான் என்று இறைதூதர் அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments