
குறள் 116:
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீ இ அல்ல செயின்.
நடுநிலை விட்டுப் பிறழ்வதே இங்கே கெடுதிக்(கு) அறிகுறி யாம்.
குறள் 117:
கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுநிலைப் பண்பாளர் தாழ்வினை என்றும் கெடுதியாகப் பார்க்கா(து) உலகு.
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி.
துலாக்கோலைப் போல நடுநிலை போற்றல் உலகிலே சான்றோர் சிறப்பு.
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
உள்ளம் ஒருபக்கம் சாயாமல் நீதியைக் காப்பதே நல்லோர் நடுநிலை யாம்.
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
நுகர்வோர்போல் எண்ணி வணிகத்தைச் செய்தல் வணிகநெறி யாகும் உணர்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments