
கோவை மாவட்டம் குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் முக்கூடல் விழா 13.2.2026 அன்று மாலை 3-00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ஷீபா ஞான தவம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முனைவர் லட்சுமி துர்கா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கவிஞர் வாகை துரைசாமி அவர்கள் தலைமை வகித்தார்கள்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் தமிழ்ச் செம்மல் குறள் யோகி,முனைவர் மு.க.அன்பர் பாட்ஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி மாணவர்கள் மனத்தில் பதியும் வண்ணம் திருக்குறள் கருத்துக்களையும், நமக்கான உடைமைகளையும் குறித்து கதை வாயிலாக எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

தூரிகை சின்னராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் குறள் சொல்லு பரிசை வெல்லு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணாக்கியர் களுக்கு வாகை வாசகர் வட்டத்தின் மூலம் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிறைவாக கல்விப் பணிச்சுடர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





2 Comments
அருமையான பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👆... உங்கள் பணி சிறக்கட்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன் அன்புறவே 👆🙏♥️🤝✍️
ReplyDeleteகோயம்புத்தூர்
ReplyDeleteஅரசு உயர்நிலைப் பள்ளி
தமிழ் முக்கூடலை
பார் எங்கும்
பார்க்கச் செய்த - தமிழ்த்
தேர் இழுக்கும்
கரங்களுக்கு நன்றிகள்
தலைமையாசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
இடையர்பாளையம்
கோயம்புத்தூர் -008