
குளக்கரையில் நீருக்குள் படர்ந்திருந்த தாமரை இலைகளை ஆளுக்கொன்றாகப் பறித்துவரும்படி ரெங்க்மாவின் தந்தை குறிப்பிட்டுவிட்டு, சுமந்து வந்த மிருகத்தை ஓரித்தில் இறக்கி வைத்து, அதனைக் கூருபோடுவதில் ஈடுபட்டார்.
இலைகளைப் பறித்து வந்தவர்கள் அவற்றைக் குளக்கரையில் வரிசைப்படுத்திப் பரப்பி வைத்தனர்.
பகுதி பகுதியாகக் கூருபோடப்பட்ட மிருகத்தின் மாமிசத்தை அவர் ஒவ்வோர் இலைகளிலும் வைத்துக்கொண்டிருக்க மற்றவர்களும் அவருக்கு உதவினர்.
மிருகத்தின் கழிவுகளை அவர்கள் குளியொன்றைத் தோண்டி அதற்குள் மண்போட்டுவிட்டு, தத்தமது பங்குகளை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடரலாயினர்.
புரோகோனிஷ் கிராமத்துக்குள் நுழைந்த அவர்கள், தத்தமது ஜாகைகளை நாடிச் சென்றனர். செரோக்கியும் ரெங்க்மாவும் தமது மனைக்குள் செல்ல, இர்வின் குகைக்குள் நுழைந்தான்.
அவன் அங்கிருந்த விரிப்போன்றை விரித்து இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, செரோக்கி குகைக்குள் நுழைந்து, குகைச்சுவற்றில் சாய்ந்தவாறு விரிப்பில் அமர்ந்தான்.
இர்வின் தன் நினைப்பிலிருந்தும் இலேசில் மறைந்து விடாதிருந்த குள்ளர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் செரோக்கியிடத்தில் கதைக்கலானான்.
அப்பொழுதுதான் செரோக்கிக்கு தான் மறைத்து வைத்திருந்த புராதன நூல் அடங்கிய பை நினைவுக்குவர, குகையின் கல்லிடுக்கினுள் மறைத்து வைத்திருந்த அதனை எடுத்துவந்து இர்வினிடத்தில் கொடுத்தான்.
ஏற்கெனவே செரோக்கிக்குத் தெரியாமல் தான் பார்த்திருந்த அந்தப் பையை அவன் திறந்தபோது, நூலும் பணக்கட்டும் இருப்பதைக் கண்டான். நூலை வெளியில் எடுத்தவன், அதன் பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிட்டு, அதில் நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்கள் கலட்டப் பட்டுள்ளதை செரோக்கியிடத்தில் சுட்டிக் காட்டினான்.
பக்கங்கள் இருந்தது பற்றியோ, இல்லாமற் போனது பற்றியோ செரோக்கிக்கு எதுவுமே தெரியாது; அதனால் அவன் அதுபற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை!
ஆனால் அதன் இரகசியத்தைத் அறிந்து கொள்ளும் நோக்கில் இர்வின் இருந்ததால் அது பற்றி மேலும் அறிந்து கொள்ள முற்பட்டான்.
“அன்று வந்த குள்ளர்கள் இங்குதான் தங்கினார்கள்; இல்லையா? ஏன் அவர்கள் இதிலிருந்தும் சில பக்கங்களைக் கலட்டி எடுத்திருக்கக் கூடாது?
அவர்கள் கலட்டி எடுத்த அந்தப் பக்கங்களுக்காகத்தான் உமக்கு அவர்கள் இந்தக் பணக்கட்டைத் தந்திருப்பார்கள்!” என்று குறிப்பிட்ட இர்வின்,
“அவர்கள் பற்றிய ஏதாவது தடயங்கள் உன்னிடம்
இருக்கின்றதா?” என்று செரோக்கியிடத்தில் வினவிய போது, செரோக்கி எந்தப் பதிலும் சொல்லாமலே, மனை நோக்கி விரைந்து செல்லலானான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments