
"அவை அனைத்துமே தலை கீழாகிப் போனதே இனிமேல் கெட்டவனாக நடிக்கவும் மனதில் தெம்பு இல்லை என் சக மருத்துவச் செல்வங்களே நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வண்ணம் பெரும் நற்குணம் படைத்த பிள்ளைகள் நான் தான் சுயநலம் பிடித்த ஓர் மனிதனாக உங்களோடு பழகி விட்டேன். தயவு செய்து ஒரு அண்ணணாக தம்பியாக தந்தையாக ஏன் தாத்தாவாக இப்படி எதுவாக நினைத்தாலும் பரவாயில்லை. என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். உங்கள் மேல் பாசம் உண்டு வேசத்தால் அதை மறைத்து விட்டேன்" என்றார் மூத்த மருத்துவர், இரு கரம் கூப்பியவாறு.
"ஐயோ ஐயா கையைக் கீழே இறக்குங்கள்" என்று எல்லோரும் பதறி எழுந்தார்கள்.
சரவணன் அவர் அருகே வந்து தோளைத் தொட்டுக் கூறினான். "உண்மையிலே நீங்க பெரியவர் தான் ஐயா. தான் செய்தவை தவறு என்று அறிந்த மறு நொடியே வயது வித்தியாசம் உயர்வு தாழ்வு பாராமல் மன்னிப்புக் கோரும் மனம் எல்லோரிடமும் இருப்பதில்லை. அப்படி இருந்தால் அவர்கள் மனிதனாக வாழும் மகான் ஐயா. நீங்கள் மகான் என் பார்வையில் உங்களை வெறுத்ததை விட அதிக படி அளவு இப்போது மதிக்கிறேன் நேசிக்கிறேன் கவலை வேண்டாம் நாங்களும் உதவுகின்றோம் ஐயா. கண்ணீரைத் துடைத்து விட்டுப் புன்னகையோடு எழுந்திருங்கள்" என்றான் சரவணன்.
அதே சிரிப்போடு குமரன் அவர் அருகே வந்தான் "சிறு ஆலோசனை கூறுகின்றேன். தவறாக நினைத்திட மாட்டீர்களா? ஐயா." என்று கேட்டான். உடனே மூத்த மருத்துவர் "இல்லை கூறும் அப்பா, என்ன கூறும்" என்றார் .
அதே புன்னகையை உதிர்த்தி விட்டு குமரன் பேசத் தொடங்கினான்," பெரிய விடையம் இல்லை ஐயா .சிறிய ஆலோசனை தான். அதாவது உங்கள் மாப்பிள்ளையின் சிறிய அன்னை யார் பெயரில் நிலம் சொத்தைக் கேட்டார். மாப்பிளை பெயரிலா? இல்லை அவர் பெயரிலா? உங்கள் பேத்தியின் பெயரிலா? இதைக் கூறுங்கள் என் ஆலோசனை எவை எனக் கூறுகிறேன்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments