
குறள் 150:
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
பிறன்மனை நாடும் செயலோ அறத்தின் நெறிமறத்தல் வாழ்வினும் தீது.
பொறையுடைமை
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
அகழ்ந்தெடுத்தும் நம்மையே தாங்கும் நிலம்போல் இகழ்வாரை நாம்பொறுத்தல் பண்பு,
குறள் 152:
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று.
பொறுப்பதைக் காட்டிலும் தீங்கிழைத்தால், தீங்கை மறப்பதே பண்பட்டோர் சால்பு.
குறள் 153:
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
வன்கொடுமை ஏழ்மை! வலிமையோ பண்பற்றோர் செய்யும் செயல்பொறுத்த லாம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments