Ticker

6/recent/ticker-posts

கத்தார், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி உட்பட 12 நாடுகள் கூட்டறிக்கை.. ஈரானுக்கு சொன்ன மெசேஜ்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னை சுற்றியுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக, கத்தார், துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது வான்வழியாக தாக்குகிறது.

இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டனர்.

இதில் பேசிய சவுதி அமைச்சர் ஃபைசல் பின், ஈரான் மீது நம்பிக்கை தகர்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கத்தார், ஜோர்டான், சிரியா, எகிப்து, துருக்கி, பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும், சர்வதேச சட்டங்களை மதித்து, தூதரகம் மூலம் அமைதி காண வேண்டும் என்றும் ஈரானுக்கு அறிவுறுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments