Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-17


சான்றாண்மை

குறள் மொழி 50

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

குறள் எண் : 987

குறள் மொழியின் பொருள் :

தனக்குத் துன்பம் செய்தவருக்கும். நம் பொறுமைப் பண்பால், மன்னிக்கும் குணத்தால் நாம் அவர்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால், நமக்குப் பெருந்தன்மை இருந்தும் பயனில்லை.

நபிமொழி:

மன்னித்தல், பொறுத்தல் உயரிய பண்பு. தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம்... "தமது வேலைக்காரனை எத்தனை முறை மன்னிக்கப்பட வேண்டும்? என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது. தினமும் எழுபது முறை என்று பதில் அளித்தார்கள்."
(ஆதாரம்:நூல் - அபூதாவூத்)

தீ நட்பு

குறள் மொழி 51

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.

குறள் எண்:811

குறள் மொழியின் பொருள் :

நம்மீது அன்பை செலுத்துபவர் போலத் தோன்றினாலும், கெட்ட குணம் உள்ளவர். நல்ல பண்பு நலன்கள் இல்லாதவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளாமல் அதை நாம் குறைத்துக் கொள்வதே நன்மையை உண்டாக்கும்.

நபிமொழி :

நல்ல பண்புநலன்கள் மிக்கவரை நண்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்...!!. காரணம், கெட்ட நண்பன். உலை ஊதுகின்றவனைப் போன்றவன். அவன் உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையானது அவனை அடைந்தே தீரும்..!
நபிகள் நாயகம் (ஸல்)
ஆதாரம் : புகாரி - முஸ்லிம்

(தொடரும்)


 


Post a Comment

0 Comments