
இனியவை நாற்பது-19.
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.
விளக்கம்:
- நண்பர்களைப் பற்றி புறங் கூறாமல் வாழ்வது இனிது.
- உண்மையுடனும், பணிவுடனும் நடந்து கொள்வது இனிது.
- பண வசதி வரும்போது, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவது இனிது.
இனியவை நாற்பது -20.
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
விளக்கம்:
- வஞ்சகர்களுடன் நெருங்கி இருக்காமல் விலகி இருப்பது இனிது.
- அறிஞர்கள் வழங்கும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது இனிது.
- உயிரினங்களுக்குக் கெடுதல் செய்யாமல் வாழ்வது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments