Ticker

6/recent/ticker-posts

அதிபர் டிரம்ப் செல்வாக்கு சரிந்தது - வெறும் 36%


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்துள்ளது. மக்கள் ஆதரவு இப்போது வெறும் 36 விழுக்காடு மட்டுமே என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. இரண்டாவது முறை அவர் பதவிக்கு வந்த பிறகு இப்போதுதான் அதிக மோசமான நிலை. போருக்குப் போனதால் செல்வாக்கு போனதாகத் தெரிகிறது. Reuters, Ipsos நடத்திய நான்கு நாள் கருத்துக்கணிப்பில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

எண்ணெய் விலை ஏற்றமும், ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த போரும் மக்களின் கோபத்துக்குக் காரணங்கள் என்று கூறப்படுகிறது. இணையத்தில் அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த வாரம் 40 விழுக்காடாக இருந்த செல்வாக்கு இந்த வாரம் மேலும் சரிந்தது. 

போர் நிற்குமா தொடருமா என்பதில் அதிபர் டிரம்ப் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து சொல்லி வருகிறார். அமெரிக்காவில் பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் விலை கூடியுள்ளது. அதனால் பணவீக்கம் நிலவுகிறது. மக்களின் அன்றாடச் செலவு அதிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்துப் பதவிக்கு வந்தார். அவர் புதிதாகப் போரைத் தொடங்குவார் என்று அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கவில்லை. கருத்துக்கணிப்பில் மொத்தம் 1,272 பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

seithi


 


Post a Comment

0 Comments