
ஈரான் நடத்திய ஒரு ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
4000 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தின் மீது இரண்டு ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். மத்திய கிழக்கைத் தாண்டி முதல்முறையாக நீண்ட தூர இலக்கைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை வான் வழி தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலால் கதிர்வீச்சு அபாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானிய ஏவுகணை இஸ்ரேலின் அணு ஆயுத மையமான டிமோனாவைத் மீது மாபெரும் வெடிப்புடன் தாக்கியது. தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரின் மீது ஈரான் ஏவுகணை தாக்கியதன் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தெற்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் காதைப் பிளக்கும் சத்தத்துடன் மாபெரும் வெடிச்சத்தம் கேட்டது.
ஈரானின் வேவ் 72 ஏவுகணை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடற்படையில் உள்ள இலக்குகளை நோக்கி வானில் சீறிப் பாய்ந்தன. ஈரானிய ஏவுகணை தாக்குதல் நெருங்கி வருவதால், வடக்கு இஸ்ரேலின் வான்வெளியில் இடைமறிப்பு ஏவுகணைகள் அதிவேகமாகப் பாய்கின்றன. ஈரானின் டெஸ்ஃபுல் பகுதியில் அமெரிக்க-இஸ்ரேல் குண்டுவீசியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது.
இதனிடையே, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஒரு துணிச்சலான தாக்குதலை நடத்தியுள்ளது. சாகோஸ் தீவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் செலுத்தியது.
ஈரான் கடற்கரைப் பகுதியில் இருந்து சுமார் 4000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் மேற்கொண்ட இந்த நீண்ட தூரத் தாக்குதல் முயற்சியானது, அதன் திறன் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டிலும் ஒரு கடுமையான தீவிரத்தைக் காட்டியுள்ளது. போரின் புவியியல் பரப்பை மத்திய கிழக்கையும் தாண்டி வெகு தூரம் கொண்டு சென்றுள்ளது.
ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 4000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தின் மீதான தாக்குதல், இதுவரையில் ஈரான் மேற்கொண்ட மிக நீண்ட தூரத் தாக்குதல் முயற்சி இது எனக் கூறப்படுகிறது. இரண்டு ஏவுகணைகளுமே தங்கள் இலக்கைத் தாக்காத போதிலும், இந்த முயற்சி வாஷிங்டனிலும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ஈரான் அறிவிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தாக்குதல் திறன்களை வைத்துள்ளது என்பதையும், 4000 கி.மீ தாண்டி தாக்குவதற்கான ராணுவ வலிமை தன்னிடம் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. எளிதாக புரியும்படி சொன்னால், 2,000 கி.மீ தூரம் வரை மட்டுமே சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் உள்ளது என நினைத்த மேற்கத்திய நாடுகளை இந்த ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஈரான் மிரளவிட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments