
இனியவை நாற்பது-15.
பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது.
விளக்கம்:
பிறருடைய மனைவியைத் திரும்பிப் பார்க்காத பெருமை இனிது.
வறட்சியால் வாடிப் போகும் பசுமையான பயிர்களுக்கு மழை பெய்வது இனிது.
மாளிகையில் பின் பக்கம் கட்டப் பட்டிருக்கும் பெரிய பெரிய யானைகளின் பிளிறலைக் கேட்பது மன்னனுக்கு இனிது.
இனியவை நாற்பது-16.
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
விளக்கம்:
அறிஞர்களிடத்தில் பேசும் போது தான் கற்ற கல்வி பற்றி கூறுவது இனிது.
நம்மை விட அறிவில் சிறந்தவர்களிடம், சேர்ந்து இருப்பது மிகவும் இனிது.
எள் அளவு கூட பிறரிடம் யாசிக்காமல், தன்னிடம் இருப்பதை தானாகவே பிறருக்கு அள்ளிக் கொடுப்பது எல்லா வகையிலும் இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments