
சிங்கப்பூரில் மருத்துவர்கள் இனி நோய் வரப் போவதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தலாம்.
அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு வழங்கும் மருத்துவர்களுக்கு அந்த வசதி கிடைக்கும். நீரிழிவு, ரத்தக் கொழுப்பு போன்ற பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புள்ளோரை முன்கூட்டியே அறியலாம்.
தற்போது ஆண்டுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் துணையோடு மூவாண்டுக்கு ஒருமுறை சோதித்தால் போதும்.
சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) நாடாளுமன்றத்தில் இன்று அந்த விவரத்தைத் தந்தார்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், Healthier SG ஆரோக்கிய சிங்கைத் திட்டத்தின்கீழ் புதிய பரிசோதனைக் கருவி வெளியிடப்படும்.
எதிர்காலத்தில் நோய் வரலாம் என்பதைக் கருவி முன்கூட்டிச் சொல்லும், அது துல்லியமாக இருக்கும் என்றது சுகாதார அமைச்சு.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments