Ticker

6/recent/ticker-posts

உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீது ஈரான் அதிரடி தாக்குதல்!


பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி ஆலை மீது ஈரான் (28) தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஆலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
 
தொழிலாளர்களின் பாதுகாப்பு முன்னுரிமை

இதற்கமைய, அந்நிறுவனம் தற்போது சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், தனது தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, தனது உற்பத்தித் திறனில் சுமார் 19% ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.

ஈரானில் உள்ள இரண்டு ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய ஆலைகளைத் தாக்கியதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

tamilwin


 


Post a Comment

0 Comments