
தவெக தொண்டர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தன்மீது அவதூறு பரப்புவதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார். தவெக தொண்டர்களுக்கு எதிரான ரஞ்சனாவின் புகாரில் போலீசார் கூறியது என்ன?
கருத்து வேறுபாடு காரணமாக தவெகவில் இருந்து வெளியேறி கடந்த வாரம் திமுகவில் இணைந்தவர் ரஞ்சனா நாச்சியார். தவெக-வில் இருந்து வெளியேறியது முதல் விஜயின் புகைப்படம், தவெக கட்சிக் கொடி வைத்துள்ள சமூக ஊடகப் பக்கங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிடப்பட்டு வருவதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்பி வருவதாகவும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் மிரட்டல்கள் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகக் கூறிய ரஞ்சனா, தன்னை பற்றிய அவதூறுப் பதிவுகளை தவெக-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தவெகவின் இணையவழிப் போராளிகளால் செய்யப்படும் இந்த ஆன்லைன் துன்புறுத்தலைத் தடுக்க கட்சியின் தலைவர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரஞ்சனா அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். ரஞ்சனாவைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாகவும் தெரிகிறது.
அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம் என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்” என தனது பிரச்சார அனுமதி மறுப்புக்கு திமுகவை சாடினார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மார்ச் 30ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு, அக்கட்சியின் பெரம்பூர் மாவட்டச் செயலாளர் தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com







0 Comments