
அமெரிக்கா ஈரானின் எரிசக்திக் கட்டமைப்புகளைத் தாக்கினால், ஹோர்முஸ் நீரிணை காலவரம்பின்றி மூடப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்று ஈரான் கூறியது. ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்துக்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்திக் கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) முன்னதாக மிரட்டியிருந்தார். அந்தக் காலக்கெடு சிங்கப்பூர் நேரப்படி நாளை (24 மார்ச்) காலை 7.45 மணிக்கு முடியும். ஈரான் போர் தொடங்கி 4 வாரங்கள் ஆகும் நிலையில் இந்தப் பதிலுக்குப் பதில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அது நடந்தால் உலகம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரும்.
இதுவரை அமெரிக்கா இந்தப் போரில் ஈரானின் எண்ணெய் வளங்களைத் தொடவில்லை.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments