Ticker

6/recent/ticker-posts

ஈரான் - இஸ்ரேல் போர் அப்டேட்கள்: மொத்த வளைகுடா நாடுகளையும் முடக்கத் தயாராகும் ஈரான்


Iran-Israel-US War Update: ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்பாக நேற்று இரவு முழுவதும் நடந்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். இதனுடன் ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். 

1. டிரம்பின் எச்சரிக்கையும் மாறுகின்ற சூழ்நிலையும்:
சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பு, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) திறந்து விட வேண்டும், இல்லையெனில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமெரிக்கா ஈரானின் அனைத்து எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் (Energy Infrastructure) அழித்துவிடும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான அறிக்கை தான்.

டிரம்பின் அறிக்கை சற்று கவனித்தால், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதையே காட்டுகிறது. அவர் தனது படைகளை அனுப்பத் தயங்குகிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர்கள் இறப்பார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, சுமார் 80% அமெரிக்கர்கள் ஈரானுடன் போர் நடப்பதை விரும்பவில்லை. அமெரிக்க வீரர்கள் ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்றால், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது டிரம்ப் மீது பெரும் அழுத்தத்தை உருவாக்கும். எனவே டிரம்ப் அதைச் செய்யாமல், இப்போது மிரட்டல் விடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த மிரட்டல் ஈரானிடம் பலிக்கவில்லை. மாறாக அதன் விளைவு தலைகீழாக மாறியுள்ளது.

2. ஈரானின் பதிலடி மற்றும் உலகளாவிய அழுத்தம்:
ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப் தனது பதிவில், "ஈரானின் மரணத்திற்குப் பிறகு (Death of Iran), அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி தீவிர இடதுசாரி மற்றும் திறமையற்ற ஜனநாயகக் கட்சிதான்" என்று எழுதியுள்ளார். அதாவது ஈரான் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும், இப்போது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மட்டுமே தனது எதிரி என்றும் அவர் கருதுகிறார்.

ஈரானின் எச்சரிக்கை மிகவும் தீவிரமானது. டிரம்ப் 48 மணி நேரக் கெடு விதித்ததற்குப் பதிலடியாக ஈரான் கூறியது, "எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா போன்ற அனைத்து வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் அழிப்போம். அதுமட்டுமல்லாமல் கடல் நீரை குடிநீராக மாற்றும் டிசலினேஷன் பிளாண்டுகளை (Desalination Plants) குறிவைப்போம்" என எச்சரித்துள்ளது.

ஒருவேளை ஈரான் டிசலினேஷன் பிளாண்டுகளை (Desalination Plants) தாக்கினால் பெரும் சிக்கலை வளைகுடா நாடுகள் எதிர்கொள்ள கூடிய  நிலை ஏற்படும். ஏனென்றால் இந்த வளைகுடா நாடுகளில் நிலத்திற்கு அடியில் தண்ணீர் இல்லை. எண்ணெய் மட்டுமே உள்ளது. எனவே அவர்கள் குடிநீருக்கு இந்த ஆலைகளையே நம்பியுள்ளனர்.

வளைகுடா நாடுகளின் குடிநீர் தேவை

கத்தார் நாட்டுக்கு தேவையான 99% குடிநீர், இந்த டிசலினேஷன் பிளாண்டு ஆலைகளையே நம்பியுள்ளது. அதேபோல குவைத் நாடு 90% குடிநீருக்காகவும், பஹ்ரைன் 90% குடிநீருக்காகவும், சவுதி அரேபியா 70% குடிநீருக்காகவும் மற்றும்  UAE 42%  குடிநீருக்காகவும் டிசலினேஷன் பிளாண்டுகளை நம்பி உள்ளது. 

எனவே ஈரான் இந்த டிசலினேஷன் ஆலைகளைத் தாக்கினால் மொத்த வளைகுடா பிராந்தியமும் குடிநீருக்காகத் தவிக்கும் நிலை ஏற்படும்.

3. ஈரான் அறிவித்துள்ள முக்கிய கோரிக்கை
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினால் தான் என்ன செய்யப்போவதாக ஈரான் ஐந்து விசியங்கள் குறித்து பேசியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் கட்டப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படும்.

இஸ்ரேல் மீது தாக்குதல்: இஸ்ரேலின் அனைத்து மின் நிலையங்கள், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படும். இணையம் முடக்கப்பட்டால் வங்கி ஏடிஎம் முதல் அனைத்தும் செயலிழக்கும்.

அமெரிக்க நிறுவனங்கள்: இப்பகுதியில் உள்ள கூகுள், ஆப்பிள், எச்.எஸ்.பி.சி (HSBC), சிட்டி வங்கி போன்ற அமெரிக்க முதலீடுகள் கொண்ட நிறுவனங்கள் அழிக்கப்படும்.

அமெரிக்க தளங்களை அனுமதிக்கும் நாடுகள்: அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு இடம் கொடுத்துள்ள நாடுகளின் மின் நிலையங்களும் இலக்குகளாகக் கருதப்படும்.

ஏவுகணைத் தாக்குதல்கள்: ஈரான் ஏற்கனவே இஸ்ரேலிய விமானத் தொழில் மற்றும் அமெரிக்காவின் இளவரசர் சுல்தான் விமானத் தளம் (Prince Sultan Airbase) மீது ஏவுகணைகளை வீசி அதன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

4. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கோரிக்கை

ஈரான் இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச சமூகம் இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் போரிட வேண்டிய நேரம் இது என்று அவர், உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு ஈரானை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகளின் உதவியை அவர் நாடுகிறார் என விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

5. ஜப்பானில் அமெரிக்காவிற்கு எதிராகப் போராட்டம்
ஜப்பானில் அமெரிக்காவிற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. 80% ஜப்பானியர்கள் இந்தப் போரில் ஜப்பான் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றனர். ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்ற நேட்டோ நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்றவை ஏற்கனவே தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுவிட்டன. இப்போது அமெரிக்கா மட்டுமே தனியாக நிற்கிறது.

zeenews


 


Post a Comment

0 Comments