
15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே அழியும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, "After Reading" எனப்படும் இந்த வசதி, ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மெசேஜ் திறக்கப்படாமல் இருந்தால், அது 24 மணிநேரத்தில் தானாகவே அழிந்து விடும். தற்போதுள்ள disappearing messages அம்சத்தில் 24 மணிநேரம், 7 நாள், 90 நாள் போன்ற கால அளவுகள் உள்ள நிலையில், இந்த புதிய அம்சம் மிகவும் குறுகிய நேரத்திற்கான தனியுரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என கூறப்படுகிறது. ஓடிபி, கடவுச்சொல் போன்ற முக்கிய தகவல்களை பகிரும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com







0 Comments