
2026ம் ஆண்டின் உலகப் பொருளாதாரம் உலகளாவிய மந்தநிலையை அடையும்; நாடுகளின் உற்பத்தி குறைந்து, விலைவாசி உயர்ந்து, மக்களின் வாங்கும் சக்தி அடியோடு முடங்கும் நிலை ஏற்படலாம் என்று ஹேஷ்யம் கூறப்படுகின்றது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிசக்தி கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது போர்க்களமாக மாறியுள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், உலகிற்கே ரத்த நாளமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது.
உலக எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கையாளும் இந்நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கப்பல் நிறுவனங்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த அஞ்சுகின்றது; இதனால் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கின்றது. ஒரு கப்பலுக்குப் பாதுகாப்புக்காகச் செலுத்தப்படும் கூடுதல் தொகை, இறுதியில் நாம் வாங்கும் பொருளின் விலையில் உயர்வை ஏற்படுத்துகின்றது.
போர் தொடங்குவதற்கு முன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திறந்திருந்த இந்த ஜலசந்தியை சீண்ட வைத்து மூடிவிட்டு... இப்போது அதே ஜலசந்தியைத் திறக்க அமெரிக்கா கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது!
ஜலசந்தியைச் சூயஸ் கால்வாய் போல ஒரு சுங்கச்சாவடியாக மாற்ற ஈரான் போட்டிருக்கும் புதிய பிரம்மாண்டமான திட்டம், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது!
இப்போது நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், மாற்றுவழிப் போக்குவரத்தில் செலவுகள் அதிகரித்து, எண்ணெய் விலை உயர, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர ஆரம்பித்துள்ளன.
இதனால், இலங்கை-இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டினால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
சர்வதேச எரிசக்தி முகமைத்துவம் இதனை "வரலாற்றிலேயே மிக மோசமான எண்ணெய் விநியோகத் தடை" என்று வர்ணித்துள்ளது.
ஒருவேளை போர் நின்றாலும், ஈரானின் தொடர் அச்சுறுத்தல் ஒரு பீப்பாய் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் 150 டொலரை எட்டலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 150 டொலராக உயர்ந்தால், அது உலக பொருளாதாரத்தில் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தியா - இலங்கை போன்ற நாடுகளின், எரிபொருள் விலை உயர்வு, சரக்கு வாகனங்களின் வாடகை உடனடியாக உயர்த்தும். இதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 20% முதல் 30% வரை அதிகரிக்கும்.
எரிபொருள் விலை உயர்வு விவசாய இயந்திரங்களை முடக்கும்; உர விலை விண்ணைத் தொடும்; இதனால் பாணின் விலை மும்மடங்காகி உணவுப்பஞ்சம் ஏற்படும்.
மின்சாரக் கட்டணத்தை கட்ட முடியாமல் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் மூடப்படும்; லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை ஏற்பம். மக்கள் கடன் சுமையில் மூழ்குவர். இதனால், இப்போதைக்கு நிலையில் யுத்தம் நின்றாலும் கூட, ஈரானின் "ஜலசந்தி அச்சுறுத்தல்" காரணமாக உலகம் ஒரு நிரந்தரப் பொருளாதார சுமையை சுமக்க வேண்டியிருக்கும்.
யுத்த நிறுத்தம் என்பது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கும்; மக்களின் பணப்பை காலியாகிக் கொண்டே இருக்கும். அதனால், பொருளாதார மந்த நிலை என்ற துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது.

போர் நின்றவுடன் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பாது. முடங்கிக் கிடந்த கப்பல்கள், காலியான கிடங்குகள் மற்றும் நிறுத்தப்பட்ட தொழிற் சாலைகளை மீண்டும் இயங்க நீண்ட காலம் எடுக்கலாம். இந்தத் தாமதம் பொருட்களின் தட்டுப்பாட்டை உருவாக்கி, சில காலங்களுக்கு விலையை உயர்வாகவே வைத்திருக்கும்.
போருக்குப் பிந்தைய சூழலில், நாடுகள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எண்ணெயைச் சேமிக்கத் தொடங்கும். தேவை அதிகமாகவும், விநியோகம் குறைவாகவும் இருப்பதால், போர் நின்ற பிறகும் "ஒரு பீப்பாய் 150 டொலர்" என்ற விலையிலேயே நீடிக்க வாய்ப்புள்ளது.
போர் நின்றதும், முதலீட்டாளர்கள், "அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை" என்று கூறி புதிய திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். முதலீடு குறைந்தால் வேலைவாய்ப்பு குறையும். இது உலக பொருளாதாரத்தை ஒரு தேக்க நிலைக்குத் தள்ளிவிடும் என்பது துறைசார் நிபுணர்களின் கருத்தாகும்.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments