Ticker

6/recent/ticker-posts

சொகுசுக் குடியிருப்பு, பாதி விலையில்


இத்தாலியின் வெனிஸ் நகரைப் போலவே தோற்றமளிக்கும் குடியிருப்புப் பகுதி எங்கு உள்ளது தெரியுமா?

சீனாவின் சிடோங் நகரில்.

ஐரோப்பியக் கட்டட வடிவமைப்பு... சிற்பங்கள், கால்வாய்கள், பாலங்கள் என எங்குத் திரும்பினாலும் ஐரோப்பியச் சாயலில் கட்டப்பட்ட அமைப்புகளைக் காணலாம்.

இங்குள்ள வீடுகளை வாங்கிக் குடியேறியவர்கள் குறைவு.

கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்த நிறுவனம் 2024இல் நொடித்துப்போனது. அதனால் கட்டுமானமும் நின்றுபோனது.

வீடுகள் பல விற்கப்படவில்லை.

கடலுக்கு அருகில், அமைதியான சொகுசு வீடமைப்பு என்று விளம்பரப்படுத்தப்பட்ட பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

வீட்டு விலை பாதியானது. மூவறை வீடுகளை மாதத்துக்குச் சுமார் 120 டாலருக்கு வாடகை எடுக்கலாம்.

இந்த மலிவான விலை இப்போது பெருநகரங்களின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலை விரும்பாத மக்களை ஈர்க்கிறது.

புதிய குடியிருப்பாளர்களுக்காகவே தற்போது சில மளிகைக் கடைகளும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன.

விநியோகச் சேவை முகப்பும் உண்டு.

seithi


 


Post a Comment

0 Comments