Ticker

6/recent/ticker-posts

பொய்ப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன… எரிபொருள் பதுக்கலைத் தடுக்க QR முறை கொண்டு வந்தோம் – கந்தசாமி பிரபு


கடந்த ஆட்சிக் கால பொருளாதார நெருக்கடியை சில தரப்பினர் தங்களின் அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தியதுடன், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலை காரணமாக ஆசிய நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையிலும், இலங்கையில் மக்கள் குறைந்த விலையில் எரிபொருள் பெற்றுவருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் சட்டவிரோத கையிருப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments