
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் கடன் வரலாறு காணாத அளவுக்கு பெருமளவு உயர்ந்துள்ளது.
வரி தொடர்பான சட்டங்கள், பாதுகாப்பு துறைக்கு அதிகளவிலான செலவுகள், மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளால் அந்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது.
குறைந்த முதலீடுகள், விலையுயர்ந்த பொருட்களில் செலவிடுவது உள்ளிட்டவை கடன்கள் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கடன் வாங்குவதும் அதற்கு அதிக வட்டி செலுத்துவதும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அது அமெரிக்க மக்களை பெரும் அளவில் பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் 3 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 100 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்திற்கு முன்பாகவே 3 ஆயிரத்து 700 லட்சம் கோடி ரூபாயை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போருக்கு இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த போருக்காக 18 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவை என வெள்ளை மாளிகையை பென்டகன் அணுகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments