Ticker

6/recent/ticker-posts

ஒரே நாளில் ரூ. 9 கோடி லாபம்.. ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்துக்கு அடித்த மெகா ஜாக்பாட்!


2026-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு மெகா ஜாக்பாட் அடித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு 'கோவாலா' என்ற மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் அவர் செய்த சுமார் ரூ. 64 லட்ச ரூபாய் முதலீடு, இன்று சுமார் ரூ.85.1 கோடி மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, அதன் பங்குகள் ஒரே நாளில் 11.7% வளர்ச்சியடைந்தன.

இதன் மூலம் ஸ்மித்திற்கு ஒரே நாளில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. தற்போது அவர் 'SS415 Investments' என்ற தனது நிறுவனத்தின் மூலம் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக உள்ளார்.

கிரிக்கெட் பயணத்தைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை. இதனால் அவர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தனது ஆஸ்திரேலிய சக வீரர் ஆஷ்டன் டர்னர் தலைமையிலான இந்த அணியில், தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், நிதித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சந்தை எனப் பல துறைகளில் முதலீடு செய்து ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளராகவும் ஸ்மித் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments