Ticker

6/recent/ticker-posts

10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்


இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற 22 பௌத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரகசியத் தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை இரவு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட துறவிகளிடமிருந்து 110 கிலோவிற்கும் அதிகமான 'குஷ்' (Kush), 'ஹாஷிஷ்' (Hashish) வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பள்ளி உபகரணங்கள், இனிப்புப் பலகாரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளின் அடிப்பகுதியில் ரகசிய அறைகள் அமைத்து இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறவியும் தலா 5 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களைச் சுமந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில், இந்தத் துறவிகள் குழு ஏப்ரல் 22 அன்று ஒரு புரவலரின் நிதியுதவியுடன் பாங்காக் சென்றது கண்டறியப்பட்டது. அவர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள், காணலிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

பண்டாரநாயக்க விமான நிலைய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை எனவும், துறவிகள் குழுவாக இவ்வாறு கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயர் கல்வி பயின்று வரும் இளவயது துறவிகளே இச்சம்பவத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெகோம்போ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nambikkai


 


Post a Comment

0 Comments