
கல்கிஸ்ஸை ஜமீதுல் பாஹிறா ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர்களின் ஊழல் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற
நிலையில், பள்ளிவாசலின் நிர்வாக குழுவின் காலம் முடிவடைந்தது.
இந்த முறைப்பாடுகளுக்கான விசாரணைகளை நடத்தாத கடந்த கால வக்பு சபை, பள்ளி நிர்வாகம் மூன்று வருடங்கள் கணக்குகள் காட்டப்படாத நிலையில், மீண்டும் அந்த நம்பிக்கை பொறுப்பாளர் சபையை பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்பாளர்களாக நியமித்தது.
அச்சந்தர்ப்பத்தில் மூன்று வருடத்திற்கான கணக்கு வழக்குகளையும் ஒரேயடியாக சமர்ப்பிக்கக் கோரிய வக்புசபை, அவற்றை அங்கீகரித்து, பள்ளிவாசளின் கட்டிட வேலைகள் முடிவடைந்திருந்த நிலையிலும் கூட, 38 மில்லியன் ரூபாய்களுக்காண வேலை திட்டம் ஒன்றை நிர்வாக சபை செய்து கொண்டிருக்கின்றது என்றும் , இந்த நிர்வாக சபையை இடைநிறுத்தினல்
வேலை திட்டங்கள் இடைநிறுத்த வேண்டி வரும் என சில காரணங்களை முன்வைத்து, மீண்டும் அதே நிர்வாக சபையை நியமித்திருந்தது.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தற்காலிகமாக பதவியில் அமர்த்தப்பட்ட பள்ளி வாசலின் நிர்வாக சபை, இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவில் இருக்கும் நிலையில் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி பள்ளிவாசல் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது .
இதை எதிர்த்து பொதுமக்களில் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவைப் பரிசீலித்த வக்பு நீதிமன்றம், எதிர்வரும் 10 ஆம் திகதி புதிய நிர்வாக சபைக்கு தேர்தல் நடாத்த தடை உத்தரவை, கடந்த சனிக்கிழமை 25. 04. 2026 அன்று விதித்தது.
இந்நிலையில் பள்ளிவாசலின் நிர்வாகிகள் இருவர் வபாத்தாகி, ஒரு நிர்வாகி தனது நிர்வாக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.
எனவே தற்போது இன்னும் புதிய வக்பு சபை நியமிக்கப்படாத காரணத்தினால், பதவியில் இருக்கும் நிர்வாக சபையை புதிய வக்பு சபை நியமிக்கும் வரையில் பதவியில் இருக்க அனுமதித்ததோடு, அவர்களுக்கு பள்ளிவாசலின் பராமரிப்பு வேலைகளில் மாத்திரம் ஈடுபட அனுமதி வழங்கி, பாரிய வேலை திட்டங்களை மேற்கொள்ளவும் தடை விதித்தது.
மேலும் இவர்கள் புதிய வக்பு சபை நியமிக்கப்பட்டதோடு காலம் முடிவடையும் எனவும், புதிய வக்பு சபை இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைத்து, புதிய தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டுமெனவும் கட்டளையிட்டது.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments