Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-124


உடனே மூத்த மருத்துவர் அவனது இரு கரத்தையும் பிடித்து கண்ணில் ஒத்திக் கொண்டு அழுதார் நீ உண்மையிலே தங்கமடா குமரா நான் தான் பாவியடா உன்னை அறிய சிறு முயற்சி கூட எடுக்கவில்லையே உன் மனசு பெரும் மனசுதான் நாட்டாமை பரம்பரை என்பதை நீ செயலிலே காட்டி விட்டாய்.

நீ கூறிய விடையத்தை நான் எனது பேத்தியிடம் கூறி இருவரும் இணைந்து சிந்தித்து முடிவு எடுக்கின்றோம் நன்றி குமரா இன்னும் ஓர் சந்தேகம் அதைக் கேட்கவா? என்றார் குமரன் முகத்தைப் பார்த்து.கேளுங்கள் ஐயா ஏன் தயக்கம் என்ன விடையம் கூறுங்கள் என்றான் குமரன்.

வேறு ஒன்றும் இல்லை குமரா எனது பேத்தி அதே மாப்பிளை தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நான் என்னசெய்வது மாற்று யோசினை ஏதும் உண்டா உன்னிடம் இருந்தால் அதையும் கூறிவிடும் என் மனசு கொஞ்சம் தைரியமாக இருக்கும் என்றார் மூத்த மருத்துவர் ஓகோ அது வேறு ஒரு பிரச்னை இருக்கு அல்லவா? ஐயா ஒன்றுமில்லை  உங்க பேத்தி அடம் பிடித்தால் மாற்று வழி உண்டு அதையும் கூறுகிறேன் ஐயா.

என்று  கூறிய குமரன் சொன்னான்  நீங்கள் கொடுத்திடும் அத்தனை நகைகளும் பொருட்களும் உங்க பேத்திக்கும் மாப்பிளைக்கும் அவர்கள் இருவருக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் மாத்திரமே உரிமை என்றும் வீடு நிலம் உங்க பொண்ணுக்கும் பேரப் பிள்ளைக்குமே அதை விற்கும்  உரிமை உண்டு என்றும் நீங்கள் மரணிக்கும் வரை பேத்தியின் அணைப்பிலே இருப்பதாகவும் மரணத்துக்குப் பின்னரே மீதமுள்ள. ஏனைய சொத்து எதாவது இருப்பின் அவை பேத்திக்கே உரிமை எனவும் பதிவு பண்ணுங்கள் அப்போதுதான் சொத்துக்காக மருமகளைக் கொடுமை செய்திட மாட்டார் மாப்பிளையின் சித்தி.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments