
குறள் 159:
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கொடியோரின் சொற்களை ஏற்றுப் பொறுப்போர் துறவிகளுக் கொப்பாவார் சொல்.
குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின்.
தன்பசி தாங்கியே நோன்பிருப்போர் எல்லோரும் வன்சொல் பொறுத்தார்க்குப் பின்.
17.அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு.
அழுக்காறை உள்ளத்தில் ஏற்காத பண்பாம் ஒழுக்க நெறிகளைப் போற்று.
குறன் 162:
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்
ஒருவ ரிடமும் பொறாமையற்ற பண்பே பெருமைக் குரியநற் பேறு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments