Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-12


இனியவை நாற்பது-23.

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 

விளக்கம்:

சோலைக்கு நடுவில், குளம் வெட்டுவது இனிது. 
மறையோர்க்கு பசுவோடு பொன்னையும் பொருளையும்  சேர்த்து வழங்குவது இனிது. 
பாவத்திற்கு அஞ்சாமல், கேடு விளைவிக்கும் சூதாடிகளிடம் இருந்து பிரிவது இனிது.

இனியவை நாற்பது -24.

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.

விளக்கம்:

வெற்றி பெற விரும்பி சினம் கொள்ளாமல் இருப்பவனின் நோன்பு இனிது. 
முடிந்த அளவு பொறுமையோடு ஒரு செயலை செய்து முடிக்கும் ஆற்றல் இருப்பது இனிது. 
தன்னிடம் இல்லாத ஆற்றலைப்  பற்றி நினைத்து வருந்தாமல், செய்யக் கூடியதைச் செய்வது இனிது. 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments