
பொறையுடைமை
குறள் மொழி 59
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
குறள் எண் :157
குறள் மொழியின் பொருள் :
தனக்குப் பிறர் தீங்கு செய்தாலும் புனைந்துரைத்து காயப்படுத்தினாலும். அதற்கு வருந்தி அறமற்ற செயல்களைச் செய்யாமல் பொறுமை காத்து அங்கிருந்து விலகிச் செல்வதே நல்லது ஆகும்.
நபிமொழி:
விமர்சகர்களிடமிருந்து விலகி இருப்போம், மாற்றுக் கருத்துடன் அவர்கள் எவற்றை எல்லாம் புனைந்துரைக்
கின்றார்களோ. அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும். கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக!
இறைவசனம்:(திருக் குர்ஆன் 73:10)
சான்றாண்மை
குறள் மொழி 60
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
குறள் எண்:981
குறள் மொழியின் பொருள் :
கடமையாகவே விருப்பத்துடன் அறப்பணியாற்றும் பண்பை ஒரு மேற்கொண்டு நடப்பவர்கள் இயற்கையாகவே நற்குணம் கொண்டவர்களாக இருப்பர்.
நபிமொழி :
"உடன் வாமும் சக மனிதர்களுக்குச் செய்யும் அறத்தொண்டு இறைவனின் கருணையைப் பெற்றுத் தந்து. சுவனத்தையும் வசமாக்கும். சமூக உறவுகளை மேம்படுத்த இரக்க உணர்வும், கருணைப் பார்வையும் இயல்பான பண்புகளாய் இருக்க வேண்டும்" என்று நபிகளார் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணல் நபிகள் (ஸல்),ஆதாரம் :புகாரி நூல்,
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments