Ticker

6/recent/ticker-posts

ஏழையின் ஏக்கம்!


தடவிக் கொடுத்து 
தட்டிக் கொடுத்து
பக்குவமாகப் புரிய வைத்து 
நன்மை தீமை 
அறிந்திட வைத்து.
அன்பு வார்த்தைகளைக் 
கொண்டு.
 நல்ல முறையில் 
அருமையான மகனாக மகளாக 
பெற்றோரின் பிடியில் இருந்து
வளர வேண்டிய பிள்ளையிவை.

வறுமையின் பிடியில் சிக்கி 
பாவிகளின் கரங்களில் மாட்டி
படாத பாடு பட்டு பரதேசியாக 
வளரும் அவல நிலையைக் கண்டு
நோவுகின்றது என்னோட மனமானது.

பசி தீர்க நாடி ஓடி வரும் 
பிள்ளையைக் குட்டிக் 
குட்டி வளர்க்கின்றான்
திட்டித் திட்டி வேலை 
செய்திட வைக்கின்றான் .
சின்னச் சின்னக் கரங்களிலே 
செங்கல் சுமந்திடச் செய்கின்றான்.
அழுத கண்ணீர்த் துடைத்தெறிய
ஒரு கரமில்லை 
அனாதையென்னும்
பெயர் கொண்ட பிள்ளை .

மடிப்பு கலையாத சட்டையும் 
தோள்பையும் மாட்டியபடியே
அன்னையின் கரம் பற்றி நடந்திடும் 
சக குழந்தைகளைக் கண்டதுமே 
முகத்தில் வாட்டம் அகத்தில் ஏக்கம்.
உள்ளிருந்து வெளியாகின்றது  
ஆசைப் பெருமூச்சு .
பின்னாடி தொடர்வதோ 
கவலைப் பார்வை 
குப்பத்துக் குழந்தைகளின் 
ஏழ்மை நிலை. 

இவைகளை தனக்குச் 
சாதகமாக்கிக் கொள்கின்றனர்  
பாதகமான பணக்கார முதலாளிகள்.  
இப்பாவிகளுக்குப் பாடம்
கற்பித்திட இன்னும் பாராளுமன்றம் 
பக்கங்களைப் புரட்ட வில்லையே
இவை தான் பெரும் கொடுமை 
பட்டாம்பூச்சியாகப் 
பறந்திடும் பருவத்திலே.
விட்டில்ப்பூச்சியாக கருகிடும்
நாட்கள் இவர்களுக்கு  என்று 
தான் முடிவுக்கு வந்திடுமோ
 நானறியேன் .

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

0 Comments