Ticker

6/recent/ticker-posts

மொசாட்டின் தவறான வழிகாட்டலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்! மதில்மேல் பூனையாகிவிட்ட ட்ரம்ப்!


இஸ்ரேலிய பத்திரிகையாளர் Yossi Yehoshua வெளியிட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, மத்திய கிழக்கு விவகார நிபுணர் Daniel Levy அல் ஜஸீராவுக்கு இஸ்ரேல்–ஈரான் போர் குறித்து முக்கிய அரசியல் அலசல் ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஈரான் மீதான தாக்குதல் தோல்வியடைந்துவரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கும் மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவிற்குமிடையே கடும் மோதல் வெடித்துள்ளதாகக் குறிப்பிடும் டேனியல் லெவி, கடந்த ஜனவரியில்  ஓர் இரகசியத் திட்டத்துடன் அமெரிக்கா சென்ற மொசாட் தலைவர் டேவிட் பார்னியா. ஈரானின் மிக முக்கியமான அரசியல் மற்றும் மதத் தலைவர்களை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டால் அந்த அதிர்ச்சியில் ஈரானிய மக்கள் வீதிக்கு வந்து அரசை கவிழ்த்து விடுவார்கள் என்ற திட்டத்தை முன் வைத்த விஷயத்தைக் குறிப்பிட்டார். 

நெதன்யாகுவின் ஒப்புதலுடன் தீட்டப்பட்ட இந்தத் திட்டம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. தலைவர்கள் கொல்லப்பட்ட போதிலும், ஈரானில் மக்கள் கிளர்ச்சி ஏற்படவில்லை; மாறாக, ஈரானிய இராணுவம் முன்னெப்போதுமில்லாத வேகத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியத் தொடங்கியது; இப்போதும் பொழிந்து கொண்டிருக்கின்றது.

திட்டம் தோல்வியில் முடிந்ததால், நெதன்யாகுவிற்கும் பார்னியாவிற்குமிடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தவறான உளவுத் தகவல்களைக் கொடுத்து இஸ்ரேலை போருக்குள் தள்ளியதாக மொசாட் மீது நெதன்யாகு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

போர்க் கப்பல்களிலிருந்தும், நேசநாடுகளிலிருந்தும் ஏவுகணைகள் மூலம் ஈரானைத் தாக்கிய அமெரிக்கா, இப்போது இராணுவ ரீதியாகத் தரைவழியாகத் தாக்கும் எண்ணத்தில், 'ஆபரேஷன் 5ஜி' என்ற பெயரில் பிரம்மாண்டமான தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இதற்காக 'யுஎஸ்எஸ் ட்ரிபோலி' என்ற போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதுடன், சுமார் 10,000 துருப்புகளைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஐந்து கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், முதலில் ஈரானின் கடற்கரையோர இராணுவத் தளங்களை அழித்து, பின் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தீவுகளைக் கைப்பற்றி, இறுதியாக கமாண்டோக்கள் மூலம் ஈரானுக்குள் ஊடுருவி அந்நாட்டின் உயர்மட்டத் தலைமையைத் தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாகும்.

மொசாடுக்கும், நெதன்யா தரப்பினருக்குமிடையே கருத்து மோதல்கள் உச்சகட்டத்திலிருந்தபோது, இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஐயால் ஸமீர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

தொடர்ந்து காஸா, லெபனான், ஈரான் போன்ற பல முனைகளில் போரிடுவதால், இஸ்ரேலின் இராணுவம் பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் சில வாரங்களில் இராணுவம் தனக்குள்ளேயே சரிந்து விழும் அபாயம் உள்ளதாக அவர் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையை எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் எதை நினைத்து போரைத் தொடங்கியதோ, அதற்கு எதிர்மாறாக விளைவுகள் நடக்கின்றன.
ஈரானின் ஏவுகணைகள் டிமோனா அணு உலை மற்றும் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமன்றி இஸ்ரேலின் முக்கிய நகரங்களையும் துல்லியமாகத் தாக்கி வருகின்றன. கடந்த ஒருமாத காலமாக பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் நிம்மதியற்றுக் கிடக்கிறார்கள்.
 
மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் காஸாவில் ஹமாஸையோ, லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வையோ இஸ்ரேலில் துவம்சம் செய்து கொள்ள முடியாதுள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ்வும் மேலும் வீரியம் கொண்டு தாக்குகின்றது. இப்போது ஈரானும் ஆங்காங்கே குண்டுமழை பொழிகின்றது; இஸ்ரேலால் எங்குமே வெற்றி காண முடியவில்லை. அந்தவகையில், இஸ்ரேல் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக டேனியல் லெவி குறிப்பிடுகின்றார்.

எதையும் இராணுவ பலத்தால் சாதித்துவிடலாம் என்ற மமதையில், ஒரு முறையான அரசியல் தீர்வில்லாமல் ஈரானுடனான போரை இஸ்ரேல் தொடங்கியதுதான் இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என லெவி குறிப்பிடுகின்றார்.

"அமெரிக்கர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவிவிட்டு, போரிலிருந்து வெளியேறத் துடிக்கிறார்கள்!" என மக்கள் சக்தி கட்சியின் தலைவர் லிம் டீன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்  அண்மையில் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.  

​தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ட்ரம்ப் நிர்வாகம் தனது இராணுவ இலக்குகளை எட்டிவிட்டதாக வான்ஸ் மழுப்புகிறார். 
ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்கா இந்த போரில் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதே!

தற்போது ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை வான்ஸ் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு உட்பட ஈரானின் பெரும்பாலான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

​போரைத் தூண்டிவிட்ட லிண்ட்சே கிரஹாம், பீட் ஹெக்செத் போன்ற 'இஸ்ரேலியக் கைக்கூலிகள்' இப்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

எப்போதும் அதிரடியாகப் பேசும் ட்ரம்ப் இப்போது மௌனமாகிவிட்ட நிலையில், 2028 தாம் எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் தனது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் வான்ஸ் இந்தப் பேரழிவுப் போரைத் தொடர விரும்பவில்லை போலத் தெரிகின்றது.

செம்மைத்துளியான்.

 


Post a Comment

0 Comments