
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உலக வரலாற்றில் இடம் பிடித்த மிக மோசமான கொடூரமான மனித இனத்துக்கு எதிரான தாக்குதலில் ஒன்றாகும்.
272 உயிர்களை காவு கொண்டு, 500க்கும் மேற்பட்ட மக்களை காயப்படுத்தி, பலரை அங்கவீனர்களாகவும் , இன்னும் பலரை ஆயுள் வரை சுயநினைவை இழக்கச் செய்து, பல பிஞ்சு உள்ளங்களை அனாதைகளாக்கி, ஈரமற்ற பாலைவன நெஞ்சை கொண்ட மனித மிருகங்களால் மனித மனித குலத்திற்கு எதிரான, மனித குலத்தின் எதிரிகளால், மனித குலத்தின் இரத்தத்தில் நீந்தி சென்று அதிகாரத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகும்.
இத்தாக்குதலானது ஒரு சதியின் பின்னணியில் நடத்தப்பட்டது என விசாரணைகளை முன் நின்று நடத்திய முன்னை நாள் சட்டமா அதிபர் (தப்புல டீ லிவேரா) அவர்கள் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தாக்குதல் சம்பந்தமாக பல்வேறுபட்ட கால பகுதிகளில் விசாரணைகள் என்ற பெயரில் குழுக்கல் அமைக்கப்பட்டாலும், விசாரணைகள் நடைபெற்ற கொண்டிருக்கும்போது விசாரணை அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதன் காரணமாக இதன் முடிவு இன்று வரை ஒரு மர்மமாகவே காணப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் இது சம்பந்தமாக பலரை கைது செய்து விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பில அவர்களால் "உயிர்த்த ஞாயிறு தாக்குதளின் சூத்திரதாரி" என்னும் பெயரில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பல நூறு உயிர்களைக் கொன்றொழித்து, நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு சென்ற பயங்கரமான நிகழ்வு ஒன்றின் விசாரணைகள் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இது சம்பந்தமாக பகிரங்க விமர்சனம் செய்வது, நூல் வெளியிடுவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.
இந்நிலையில் நீதமான விசாரணைகளுக்கு இடையூறாக அமைவதாகவே இப்புத்தக வெளியீடை நோக்க வேண்டி உள்ளது.
இத்தாக்குதலானது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த, முஸ்லிம் பெயரையுடைய, சில பெயர் தாங்கிகளால் நடத்தப்பட்டாலும், இத்தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் சமூகத்திற்கோ முஸ்லிம் ஆன்மீக அமைப்புகளுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை எனவும், இதில் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக எந்தப் பின்னணி நோக்கமும் இல்லை எனவும் முன்னைய கால ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.
இந்நிலையில் இப்புத்தக வெளியீட்டினது நோக்கம் என்ன என்பதை இந்த நூலில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இறுதியில் இச்சம்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவியான முஸ்லிம் சமூகம் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டது.
சதியொன்றின் பின்னணியில் நடாத்தப்பட்ட இத்தாக்குதலின் காரணமாக சுமார் 7600 அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டு, ஆறு மாத காலத்தினுள் 7400 பேர் அப்பாவிகள் என விசாரணைகளின் பின்னர் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டனர்.
மீதி 200 பேரில் 24 பேர் மாத்திரமே குண்டுதாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டு இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 7575 பாவிகள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தனர்.
இதிலிருந்து முஸ்லிம் சமூகம் இக்கொடூர செயலினால் எவ்வளவு தூரம் மன உளைச்சலுக்கு உள்ளானது என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.
முஸ்லிம் சமூகம் வரலாற்றில் மறக்க முடியாத அளவுக்கு சித்திரவதைக்கு உள்ளானது. இந்த நாட்டில் கௌரவமாகவும், சுயமரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டது, தமது மார்க்க விளுமியங்களுடன் நடமாடிய முஸ்லிம் சமூகம், ஒரு பயங்கரவாத சமூகமாக சித்தரிக்கப்பட்டது.
தூக்கு மேடையில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகம், இச்சம்பவத்தில் ஒரு நிரபராதியான சமூகமாக உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்தப் புத்தக வெளியீடு இடம் பெற்றுள்ளது.
நீதிமன்றம் ஒன்றில் உண்மைகள் சாட்சியங்களுடன் துருவித் துருவி ஆராய்ந்து விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப் புத்தக வெளியீட்டின் நோக்கம்:
உண்மைகளை மறைத்து மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீது, அபாண்டங்களை சுமத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளது.

எந்தவித ஆதாரங்களும் இன்றி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து, நாட்டுக்காக பல்லாயிரம் கோடி சொத்து செல்வங்களை வாரி வழங்கி, நாட்டிற்காக பல தியாகங்களைச் செய்த ஒரு கௌரவமான சமூகத்தை இலக்காக கொண்டு தான்தோன்றித்தனமாக தான் நினைத்தபடி நிரபராதியான ஒரு சமூகத்தின் மீது எந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாமல் அபாண்டங்களை அள்ளி வீசிய இந்நூல் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின்
கவனத்திற்கு :
இந்நூல் தடை செய்யப்படாமல் மக்கள் கைகளில் தவழ விடப்படுமாயின், நாட்டிற்கு பல தியாகங்களைச் செய்து, கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், பல தசாப்தங்களின் பின் பின்னொரு காலத்தில் முஸ்லிம் சமூகம் நாட்டிற்கு துரோகம் செய்த ஒரு சமூகமாக சித்தரிக்கும் நிலை உருவாகும்.
எனவே இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து எந்தவித ஆதாரமும் இன்றி முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டங்களை அள்ளி வீசியிருக்கும் இந்நூலை தடை செய்யப்பட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆன்மீக அமைப்புக்களின் கவனத்திற்கு :
குண்டுவெடிப்பு சம்பந்தமாக, உண்மைகள் வெளி கொண்டு வரப்பட வேண்டும், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற
நோக்கத்தோடு, மதிப்பிற்குரிய காடினல் அவர்கள் நாட்டில் பலமுறை அறைகூவல் விட்டதை ஞாபகப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் மதிப்பிற்குரிய கிறிஸ்தவ மத தலைவர் அவர்கள் இதன் உண்மையை வெளிக் கொண்டு வர முஸ்லிம் சமூகத்திற்கு பொறுப்பான ஆன்மீக அமைப்புகள் அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்க வேண்டும்எனவும்,இதன் உண்மையை வெளிக் கொண்டு வர தன்னுடன் கைகோர்கும்பம்படியும் பலமுறை அழைப்பு விடுத்தும், முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக தலைமைகள் இது சம்பந்தமாக எந்த கவனமும் செலுத்தவில்லை.
சதி ஒன்றின் பின்னணியில் இருந்து நாட்டிற்கும் நாட்டின் பிரமத சமூகங்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி முஸ்லிம் சமூகத்தின் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்தும் மௌனம் சாதிக்காமல், இந்த நாட்டின் வாழப் போகும் எதிர்கால சந்ததியின் தலை விதியை கருத்தில் கொண்டும், இந்த நாட்டில் சேறு பூசப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் வரலாற்றினை கருத்தில் கொண்டும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments