Ticker

6/recent/ticker-posts

காகங்களைச் சுட்டுக்கொல்ல இயந்திரக் காகங்கள்


சிங்கப்பூரில் காகங்களைச் சுட்டுக்கொல்லத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூரோங்கில் இயந்திரக் காகங்கள் பயன்படுத்தப்பட்டன. மூன்று மணிநேரத்தில் 16 காகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.

சென்ற வாரம் முதல் இதுவரை 40 காகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது. பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் சுடும் நடவடிக்கை மேற்கொள்ளும் இடத்திலிருந்து 15 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை இடம் சுற்றிவளைக்கப்படுகிறது. மேல் நோக்கி மட்டுமே சுட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு காகங்களின் தொடர்பில் சுமார் 15,000 புகார்கள் வந்துள்ளன. 2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது மும்மடங்கு அதிகம். காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மரக்கிளைகளை வெட்டி, கூடுகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இருப்பினும் 2024ஆம் ஆண்டில் காகங்களின் எண்ணிக்கை 160,000க்கு உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுக்குப் பிறகு சென்ற மாதம் காகங்களைச் சுடும் நடவடிக்கை யீஷுனில் தொடங்கியது.


seithi


 


Post a Comment

0 Comments