Ticker

6/recent/ticker-posts

போதை கடத்தலில் சிக்கிய மகள் ; பொலிஸாரை கண்டதும் தாய் செய்த செயல் ; அதிர்ச்சி தரும் குடும்ப பின்னணி


களுத்துறை மில்லனிய பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டில் இருந்த தாய், பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றதாகவும் மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ஹல்தோட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணும் அவரது 45 வயதுத் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த இளம் பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​பொலிஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டார்.

இதன்போது, ​​அவரிடமிருந்து 15 பொதிகளில் போதைப்பொருட்களும், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 51,570 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளம் பெண் அளித்த தகவலின் அடிப்படையில், கெலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்ய பொலிஸ் குழு ஒன்று சென்றுள்ளது.

வீட்டில் இருந்த தாய், பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றதாகவும், பின்னர் அவரைச் சோதனையிட்டபோது, ​​அவரிடமிருந்தும் ஹெராயின் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் மூத்த சகோதரரும், அவரது தாயின் இரண்டாவது கணவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மே 9-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

jvpnews


 


Post a Comment

0 Comments