
“அமேசான்” அலுவலகத்திற்கு வந்த அந்த அனாமேதய தொலைபேசி அழைப்பு இர்வினுக்குக் குள்ளர்கள் பற்றிய தகவல் ஒன்றை அறியத் தந்தது. அட்டைப்படச் செய்திப்பாடமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்த நபர்கள் 'நுண்ணுயிர் ஆய்வு மையம்' ஒன்றில் பயிற்சி பெறுவோர் களாக இருப்பதகத் தகவல் தந்த அந்த அழைப்பு, மேலதிக விவரங்கலைத் தராமலேயே துண்டிக்கப்பட்டு விட்டது!
அந்த அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தது என்ற தகவலைக் கூட இர்வினால் அறிந்து கொள்ள முடியாதிருந்தது!
அலுவலகம் முடிவுற்றதும் தன் வீடு சென்ற இர்வின், நன்றாகத் தூங்கி எழுந்து, விடிந்ததும் விடியாததுமாக செரோக்கியிடமிருந்து எடுத்து வந்த புகைப்படத்தின் அசல் பிரதியுடன் மரவேரடிக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு தனது சக்தியூர்த்தியைப் பாதுகாப்பான இடமொன்றில் நிறுத்தி வைத்துவிட்டு, மரவேரிடுக்கில் சொருகி வைக்கப்பட்டிருந்த வனவாசிகள் உடைகளை மாற்றிக் கொண்டவனாக புரோகோனிஷ் பகுதி நோக்கி நடக்கலானான்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு செரோக்கியும் அவனது தந்தையும் வனத்துக்குச் செல்லும் நிலையில் தம்மைத் தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.
தாய் தந்த மூலிகைக் கஞ்சை தந்தையும் மகனும் அருந்திவிட்டு, தோல்பைகளை மாட்டிக்கொண்டிருந்தபோது, திடுதிப்பென வந்து சேர்ந்த இர்வினைக் கண்டதும் ஆச்சரியப்பட்டான் செரோக்கி!
இன்முகம் மலர்ந்து செரோக்கியும் பெற்றோரும் அவனை வரவேற்றனர்! செரோக்கியின் தாய் இன்னொரு மூலிகைக் காஞ்சிச் சிரட்டையைக் கொண்டுவந்து இர்வினுக்குக் கொடுத்தாள்! இர்வினும் அதனை வாங்கி ‘மடக் மடக்’ எனக் குடித்துவிட்டு சிரட்டையை நிலத்தில் வைத்தான்!
தாம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வனத்துக்குச் செல்லப் போகும் செய்தியை செரோக்கி கூறியபோது, அவர்கள் எங்கிருந்து எவ்வாறான எச்சங்களையும், மூலிகைகளையும் திரட்டுகின்றார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இர்வின், தானும் அவர்களோடு இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்ட போது அவர்கள் மறுக்கவில்லை!
தம்மிடமிருந்த புகைப்பட அசல் பிரதியை ரெங்க்மாவிடம் ஒப்படைத்த இர்வின், தன் நண்பனுடனும், அவனது தந்தையுடனும் சேர்ந்து நடந்தான். மூவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு, செரோக்கியின் தாயும், ரெங்க்மாவும் தமது கண்களிலிருந்து அவர்கள் மறையும் வரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments