Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-35

வெஃகாமை

குறள் 171:

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.

பிறரின் பொருளைக் கவர்ந்தால் குடும்பம் அழியும்! பெருகிவரும் தீது.

குறள் 172:

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.

கவர்தல் பழிச்செயல் என்றேதான் அஞ்சித் தவிர்ப்பார் நீதிமான் இங்கு.

குறள் 173:

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.

இன்பம் கிடைக்கிற(து) என்றே அறம்பிறழ்ந்து பண்புள்ளோர் ஏற்கமாட்டார் கூறு.

குறள் 174:

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.

புலனடக்கம் கொண்டோர் வறுமையில் கூட பிறர்பொருள் நாடமாட்டார் கூறு.

குறள் 175:

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.

மற்றவர்க் குள்ள பொருளைப் பகுத்தறிவு பெற்றோர் கவரமாட்டார் கூறு.

குறள் 176:

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

அருள்நாடும் இல்லறத்தான் மாற்றான் பொருளைக் கவர்ந்தால் அழிந்திடுவான் காண்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments