
சான்றாண்மை
குறள் மொழி 69
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.
குறள் எண் :988
குறள் மொழியின் பொருள் :
நற்குணங்கள் என்னும் பண்புகளுடன் மனவலிமையை ஒருவன் பெற்றிருந்தால் பொருள் இல்லாத வறுமை நிலை கூட ஒருவனுக்கு இழிவைத் தராது.
நபிமொழி
ஏழையோ, செல்வந்தரோ பிற மக்களுக்குச் செய்யும் எந்தவொரு சேவையும் தர்மம் தான் என்று இஸ்லாம் உயர்த்தியுள்ளது.
இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஒருவர் நீதி வழங்குவாராயின் அதுவும் தர்மமே! ஒருவருக்கு வாகனத்தில் ஏறி அமர உதவுவதும் தர்மமே! நல்ல பேச்சு பேசுவதும் தர்மமே! தொல்லை தரும் வகையில் கிடக்கும் பொருளை பாதையில் இருந்து அகற்றுவதும் கூட தர்மமே.
நபிகள் பெருமானார் (ஸல்), ஆதாரம்: புகாரி, முல்லிம்.
குறள் மொழி 70
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
குறள் எண் :7
குறள் மொழியின் பொருள் :
எந்த வகையிலும் கடவுளுக்கு நிகரும் இணையும் யாருமில்லை. அத்தகைய கடவுளின். திருவடியைப் பற்றிக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் தம் மனக் கவலைகளை, துன்பங்களை மாற்றிக் கொள்ள இயலாது.
நபிமொழி
நெற்றியால் இறைவனைத் தலைவணங்கி வெற்றி கொள்; அல்லாஹ்வுக்கு (இறைவனுக்கு) நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ இறைவனுக்கு ஒரு சஜ்தா தலைகுனிந்து வணங்கினால், அற்காக அவன் உன் ஒரு தகுதியை உயர்த்தி உன் குற்றங்களில் ஒன்றை மன்னிக்காமல் இறைவன் இருப்பதில்லை.
அண்ணல் நபிபெருமான் (ஸல்)
நூல் :முஸ்லிம்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments